மகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்.. சைந்தவி என்ன பண்ணாரு பாருங்க!
சென்னை: மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது மகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளியை தமிழ்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதிலும், சினிமா பிரபலங்கள் பலரும் வாணவேடிக்கை வெடித்து கொண்டாடிய வீடியோக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

விவாகரத்து செய்து பிரிந்த பிரபலங்கள் கூட நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தங்களது தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டம்: தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கடந்த சில மாதங்களில் நடந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு தமிழ்நாட்டு மக்களும் சினிமா பிரபலங்களும் தீபாவளி திருநாளை புத்தாடை அணிந்தும் பட்டாசு வெடித்தும், நண்பர்களுடனும், குடும்பத்துடனும் இனிப்புகள் உண்டு கொண்டாடிய புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராம் முழுவதுமே நிறைந்து காணப்படுகிறது. பிரபலங்கள் பட்டாசு வெடிக்கும் போட்டோக்களையும் புது டிரெஸ் எப்படி இருக்குன்னு பாருங்க என ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
மகளுடன் தீபாவளி கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்: இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷுக்கு சமீபத்தில் இன்னொரு தேசிய விருது கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்காக முதல் தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ், தனுஷின் வாத்தி படத்துக்காக சமீபத்தில் தேசிய விருது வென்றார். இந்நிலையில் அதே சந்தோஷத்துடன் தனது மகள் அன்வி உடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
மனைவியுடன் விவாகரத்து: பள்ளியில் படிக்கும் போதே ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். 2013ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 7 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் இவர்களது திருமண வாழ்க்கை மேலும், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். சமீபத்தில், நீதிமன்றம் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: தனது மகள் அன்வி காரின் மேலே அமர்ந்துக் கொண்டு காதை பொத்திக் கொள்ள அப்பா ஜி.வி. பிரகாஷ் குமார் வாணவேடிக்கையை வைத்துவிட்டு ஓடி அவர் அருகே சென்று நின்று கொண்டார். இருவரும் ஜாலியாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சைந்தவி ரியாக்ஷன்: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து செய்து பிரிந்தாலும் இருவரும் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே தொடர்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு சைந்தவி லைக் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் இன்னொரு வாழ்க்கையை தேர்வு செய்வார்களா? இல்லையா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். தனது மகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவையும் சைந்தவி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











