»   »  அமைதியாக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி: லட்சுமிக்கு பதில் அளித்த ஜி.வி. பிரகாஷ்

அமைதியாக இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி: லட்சுமிக்கு பதில் அளித்த ஜி.வி. பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட ட்வீட்டுகளை ஆர்.ஜே. பாலாஜி கண்டுகொள்ளாத நிலையில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதில் அளித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு. அந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்திருப்பார்.

GV Prakash replies to Lakshmi Ramakrishnan

இதை பார்த்த லட்சுமி ட்விட்டரில் பாலாஜியை திட்டி தீர்த்துவிட்டார். ஆனால் பாலாஜியோ லட்சுமிக்கு பதில் அளிக்காமல் அமைதியாக உள்ளார். லட்சுமி பாலாஜியோடு சேர்த்து ஜி.வி. பிரகாஷ் குமாரிடமும் கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது அடுத்த படத்தில் நல்ல அர்த்தமுள்ள கதாபாத்திரம் அளித்தால் நடிக்க ரெடியா என லட்சுமி ஜி.வி. பிரகாஷிடம் கேட்டிருந்தார். அதற்கு ஜி.வி. ட்விட்டரில் பதில் அளித்து கூறியிருப்பதாவது,

@LakshmyRamki கண்டிப்பாக. கதையை சொல்லுங்க மேடம். கதை நன்றாக இருந்தால் நிச்சயம் நடிக்கிறேன். காக்காமுட்டை, பரதேசி, கேங்ஸ் ஆப் வாசிபூர், ஆடுகளம் படங்களை பண்ணியவன் நான் தான் என தெரிவித்துள்ளார்.

English summary
GV Prakash Kumar has replied to Lakshmi Ramakrishnan saying that, he is ready to act in her movie if the script is good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil