»   »  கவிழ்ந்த ஜிவி.பிரகாஷ்... கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்?

கவிழ்ந்த ஜிவி.பிரகாஷ்... கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எவ்வளவு வேகமாக மேலே ஏற்றிவிடுமோ சினிமா அதே வேகத்தில் கீழே இறக்கவும் செய்யும்.

அது இப்போதுதான் ஜிவி.பிரகாஷுக்கு தெரிந்திருக்கும். நேற்று வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் அந்த பாடத்தைக் கொடுத்திருக்கிறது.

GV Prakash's future becomes questionable

டார்லிங் ஹிட் மூலம் எண்ட்ரியான ஜிவி.பிரகாஷ், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் முன்னணிக்கு வந்தார். அதன்பிறகு நடந்ததெல்லாம் வேற லெவல். தமிழ் சினிமாவில் பாதி தயாரிப்பாளர்கள் என்கிட்ட ஜிவி.பிரகாஷ் கால்ஷீட் இருக்கு என்று சுற்றுகிறார்கள். சாலிகிராமத்தில் ஏதாவது ஒரு டீக்கடையில் போய் டீ கேட்டால் கூட 'ஜிவி.பிரகாஷ் கால்ஷீட் வேணுமா?' என கேட்கும் அளவுக்கு வருகிற அட்வான்ஸையெல்லாம் வாங்கி போட்டார் ஜிவி.பிரகாஷ்.

ஆனால் நேற்று வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை சீண்ட ஆளில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் வந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் கூட இப்போதும் ஃபுல் ஆகிறது. ஆனால் ஜிவி.பிரகாஷ் படத்துக்கு சில அரங்குகளைத் தவிர பிறவற்றில் கூட்டத்தை காணோம். குறிப்பாக சிங்கிள் ஸ்க்ரீன் அரங்குகளில்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா மூலம் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த ஜிவி.பிரகாஷ் இந்த படத்தின் மூலம் எல்லா ஆடியன்சையுமே இழந்துவிட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதனால் ஜிவி.பிரகாஷுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு கனவில் திரிந்த தயாரிப்பாளர்களெல்லாம் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஜிவி.பிரகாஷோ பிரஸ் ஷோவுக்கு கூட வர முடியாத அளவுக்கு ஷூடிங்கில் பிஸியாக இருக்கிறார். கையில் மட்டும் ஐந்து படங்கள் இருக்கின்றன. ஐந்தில் ஒன்றுகூடவா காப்பாற்றாது என்ற தைரியம்தான்!

English summary
GV Prakash's yesterday release Enakku Innoru Per Irukku failed to impress the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil