»   »  எனக்கேத்த ஜோடி ஹன்சிகா தான்...: ஜீவா

எனக்கேத்த ஜோடி ஹன்சிகா தான்...: ஜீவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: சினிமாவில் எனக்கு சரியான ஜோடி ஹன்சிகா தான் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா படம் கடந்த வாரம் ரிலீசானது. இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியில் படத்தின் வெற்றியின் பங்களிப்பாக 5 பெண்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் மொபட்டுகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஜீவா, ஹன்சிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜீவா பேசியதாவது:-

வெற்றிப்படம்...

வெற்றிப்படம்...

போக்கிரி ராஜா படம் பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தலைப்பு பற்றாக்குறை...

தலைப்பு பற்றாக்குறை...

ரஜினி படங்களின் தலைப்பை தற்போது பயன்படுத்த காரணம், தமிழ் சினிமாவில் தலைப்பு பற்றாக்குறை தான்.

பொழுதுபோக்கு படங்கள்...

பொழுதுபோக்கு படங்கள்...

நான் தொடர்ந்து பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். மேலும் 3 படங்களில் தற்போது நடித்து கொண்டிருக்கிறேன். அவை இந்த ஆண்டில் வெளியாகும்.

சாப்பாடு தான் காரணம்...

சாப்பாடு தான் காரணம்...

நான் இளமையாக இருக்க காரணம் எனது அம்மா, எனது மனைவியின் சமையல் தான்.

ஹன்சிகா தான்...

ஹன்சிகா தான்...

எனக்கு இணையான ஜோடி என்று யாரையும் தற்போது குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால் எனக்கு சரியான ஜோடி ஹன்சிகா தான்.

சிபிராஜ்...

சிபிராஜ்...

இந்த பட விளம்பரங்களில் நடிகர் சிபிராஜுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூற முடியாது. அவரை ஒதுக்கவில்லை. எனக்கும், அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் தான் நடித்துள்ளார்.

ஒரே குடும்பம்...

ஒரே குடும்பம்...

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இளைய நடிகர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன்பும் நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Actor Jiiva has said that Hansika is his better partner in cinema.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil