»   »  ஹேப்பி பர்த் டே கமல் ஹாஸன்!

ஹேப்பி பர்த் டே கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைஞானி என்றும் உலக நாயகன் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல் ஹாஸன் இன்று 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

அவருக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் படத்திலேயே விருது

முதல் படத்திலேயே விருது

1954 ம் ஆண்டு பிறந்த கமல் ஹாஸன், 5 வயதிலேயே தன் கலைப் பயணத்தை களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்தார். நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை வென்றார். தொடர்ந்து சிவாஜியுடன் பார்த்தால் பசி தீரும், எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் சிறுவனாக நடித்தார். மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

ஆரம்ப காலம்

ஆரம்ப காலம்

பின்னர் ஏழு ஆண்டுகள் நடிக்காமலிருந்த அவர், 1970- மாணவன் படத்தில் நடித்தார். குறத்தி மகனில் சின்ன வேடத்தில் நடித்தார். பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயன்று வந்தார்.

18 படங்கள்

18 படங்கள்

1976-ல் மட்டும் கமல் ஹாஸன் நடித்த படங்கள் எண்ணிக்கை 18. ஹீரோ என்றில்லை.. ஹீரோவுக்கு நண்பன், கவுரவ வேடம், குணச்சித்திர வேடம் என கிடைத்த வேடங்களைச் செய்தார் கமல்.

16 வயதினிலே

16 வயதினிலே

1977-ல் இன்னும் ஒரு படி மேலே போய் 20 படங்கள் நடித்தார் கமல். இந்த ஆண்டுதான் அவரது வாழ்க்கையில் முக்கியத் திருப்பு முனை ஏற்பட்டது. அதைத் தந்தவர் இயக்குநர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் கமல் ஏற்ற சப்பாணி வேடம், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக அவரை அடையாளம் காட்டியது.

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை படத்தில் கமலின் மிகச் சிறந்த நடிப்புக்கு தேசிய விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு. நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காகவும் அவர் தேசிய விருது வென்றிருக்கிறார்.

வித்தியாச கமல்

வித்தியாச கமல்

சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், மங்கம்மா சபதம் போன்ற வழக்கமான சினிமாக்களில் நடித்தவர்தான் கமல், என்றாலும் ஒரு கட்டத்தில் அந்த வழக்கமான ஃபார்முலாவையே ஹைடெக்கில் தர ஆரம்பித்தார், அபூர்வ சகோதரர்கள் மாதிரி.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

கமல் ஹாஸன் படங்களும் சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்தவை என்றாகிவிட்டன பின்னாளில். அவர் என்ன படம் எடுத்தாலும் குறை சொல்ல, எதிர்ப்பு காட்ட ஒரு கூட்டம் கிளம்பிவிடுவது வழக்கம். உச்ச பட்ச சர்ச்சைகள் விருமாண்டிக்கும் விஸ்வரூபத்துக்கும்தான்.

ஆதங்கம்

ஆதங்கம்

'என் வருத்தமெல்லாம், நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்பதுதான். வயசு பத்தலையே என்பது, இன்னும் அதிக சினிமாக்களைத் தரமுடியாமல் போகிறதே என்பதற்காகத்தானே தவிர, அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. இருக்கிற இந்த கொஞ்ச காலத்துக்குள் இன்னும் அதிக படங்களைத் தரவேண்டும். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது.."

-இது அடிக்கடி கமல் ஹாஸன் சொல்வது.

அதிகப் படங்கள்

அதிகப் படங்கள்

அதனால்தானோ என்னமோ இன்னும் அதிகப் படங்கள் தரவேண்டும் என்ற ஆர்வத்தில், நிறைய படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு மூன்று படங்கள்

இந்த ஆண்டு மூன்று படங்கள்

இந்த ஆண்டு மட்டும் கமல் ஹாஸன் உத்தம வில்லன், பாபநாசம் மற்றும் தூங்காவனம் என மூன்று படங்களில் நடித்துவிட்டார். அடுத்த ஆண்டும் மூன்று படங்கள் தயார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இன்னும் அதிக காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படைப்புகளைத் தர கமல் ஹாஸனை ஒன் இந்தியா வாழ்த்துகிறது!

English summary
Kamal Hassan is celebrating his 61st birthday in Chennai today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil