»   »  ஹேப்பி பர்த்டே ப்ரின்ஸ்: மகேஷ் பாபுவுக்கும், ரஜினிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?

ஹேப்பி பர்த்டே ப்ரின்ஸ்: மகேஷ் பாபுவுக்கும், ரஜினிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். ட்விட்டரில் அவரும் ரஜினியை போன்று ஒரேயொரு அரசியல் தலைவரை பின் தொடர்கிறார்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடினார். மனுஷனுக்கு வயது ஏறிக் கொண்டே போனாலும் இன்னும் சின்னப் பையன் போன்று இருந்து இளம் ஹீரோக்களுக்கு கடும் போட்டியாக உள்ளார்.

அவர் தெலுங்கு படங்களில் நடித்தாலும் இந்தியா முழுவதும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள். அவரது பிறந்தநாளில் அவரை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

4 வயதில் நடிப்பு

4 வயதில் நடிப்பு

4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேஷ் பாபு. அதன் பிறகு படிக்க வேண்டும் என்பதற்காக நடிப்புக்கு சில காலம் பிரேக் விட்டார். அவரும், நடிகர் கார்த்தியும் சென்னையில் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.

தெலுங்கு

தெலுங்கு

சென்னையில் படித்து வளர்ந்த மகேஷ் பாபுவுக்கு தமிழ் நன்றாக தெரியும். தெலுங்கு படங்களில் நடிக்கும் அவருக்கு தெலுங்கு மொழியில் எழுதப் படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்

ட்விட்டர்

ரஜினி ட்விட்டரில் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவர் பிரதமர் மோடி. அதே போன்று மகேஷ் பாபுவும் ஒரேயொரு அரசியல் தலைவரை தான் ட்விட்டரில் பின்தொடர்கிறார். அவர் தான் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லா. ஜெயதேவ் மகேஷ் பாபுவின் அக்கா பத்மாவதியின் கணவர் ஆவார்.

முதல் படம்

முதல் படம்

1999ம் ஆண்டு வெளியான ராஜ குமாருடு தான் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்த முதல் படம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா நடித்திருந்தார்.

மனைவி

மனைவி

மகேஷ் பாபு தன்னை விட 3 வயது பெரியவரான நடிகை நம்ரதா ஷிரோத்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவுதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

English summary
Prince Mahesh Babu is celebrating his 41st birthday today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil