»   »  இன்று நடிகர் ராணாவுக்கு பிறந்தநாள்: சென்னைவாசிகள் கண்டிப்பாக வாழ்த்தணும், ஏன்னா...

இன்று நடிகர் ராணாவுக்கு பிறந்தநாள்: சென்னைவாசிகள் கண்டிப்பாக வாழ்த்தணும், ஏன்னா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராணா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வருபவர் ராணா டக்குபாட்டி. பாகுபலி படத்தில் பல்லாள தேவாவாக வந்து அசத்திய அவர் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது ஆந்திராவில் தீயாக வேலை செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை லாரி, லாரியாக அனுப்பி வைத்தவர். அவருக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராணா. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என தனுஷ் ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார்.

ஹன்சிகா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராணா. இந்த ஆண்டு உங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட ஆண்டாக இருக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

மாதவன்

சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரோ.... பாகுபலி வருடமாக அமையட்டும் என்று வாழ்த்தியுள்ளார் நடிகர் மாதவன்.

ஜெனிலியா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய பையா ராணா...உங்களுக்கு இது சூப்பர் ஸ்பெஷல் பிறந்தநாளாக அமையட்டும் என்கிறார் ஜெனிலியா

ஸ்ரேயா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராணா. மகிழ்ச்சியாகவும், ஆசிர்வதிக்கப்பட்டும் இருங்கள் என வாழ்த்தியுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.

English summary
Actor Rana Daggubati has turned 31 on monday. Celebs and fans have wished him a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil