»   »  இன்று 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அஜீத்

இன்று 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உழைப்பாளர் தினமான இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அஜீத் குமார்.

ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் அஜீத், திரையுலகில் கிங் ஆப் ஓபனிங் என்று கொண்டாடப்படுகிறார்.

இன்று இந்த அளவுக்குக் கொண்டாடப்படும் அஜீத், அந்த இடத்தை சாதாரணமாகப் பெற்றுவிடவில்லை.

ஆசை

ஆசை

அமராவதி படம் மூலம் தமிழில் அறிமுகமான அஜீத்துக்கு, முதல் திருப்பு முனையாக அமைந்தது ஆசை திரைப்படம்.

காதல் கோட்டை

காதல் கோட்டை

அகத்தியன் இயக்கத்தில் அவர் நடித்த காதல் கோட்டை தேசிய விருதினைப் பெற்றது. அஜீத்துக்கு திரையுலகில் நிரந்தரமான இடம் பெற்றுத் தந்ததில் காதல் கோட்டைக்கு முக்கியப் பங்குண்டு. இந்தப் படத்தின் மூலம் ஆந்திராவிலும் அவர் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றார்.

தீனா

தீனா

இன்று ரசிகர்கள் அனைவரும் தல என்று அவரைக் கொண்டாட காரணமான படம் இந்த தீனா-தான். ஏ ஆர் முருகதாசுக்கு முதல் படம் இது.

பில்லா

பில்லா

ஏற்றம் இறக்கமாகப் போய்க் கொண்டிருந்த அஜீத்தின் திரையுலக மார்க்கெட்டை நிலையாக நிற்கவைத்த படம் பில்லா. இந்தப் படத்திலிருந்துதான் அவர் கிங் ஆப் ஓபனிங் ஆனார்.

மங்காத்தா

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அஜீத்தின் 50வது படம் இது. இதில் அவர்தான் ஹீரோ கம் வில்லன். கலக்கலான வசூலுடன் ஓடிய மங்காத்தா, அஜீத்தின் கேரியரில் பெரிய வெற்றிப் படமாகும்.

55 படங்கள்

55 படங்கள்

1995-ல் நடிக்க வந்த அஜீத், இதுவரை 55 படங்களில் நடித்துவிட்டார். அவரது திரையுலகப் பயணத்துக்கு வயது 20. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவர், இன்று தமிழ் சினிமாவின் முக்கிய தலயாகத் திகழ்கிறார்.

விருதுகள்

விருதுகள்

பாலக்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் - கொல்கத்தாவைச் சேர்ந்த மோகினி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அஜீத், இதுவரை 3 பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

ரேஸ்

ரேஸ்

முன்பெல்லாம் கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், குட்டி விமானம் இயக்குதல் என விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த அஜீத், இப்போது மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்துவிட்டதாக அறிவித்தாலும், அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடத் தவறுவதில்லை. இன்று அவர் பிறந்த நாளை ஏகப்பட்ட நற்பணிகளுடன் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

பிறந்த நாள் வாழ்த்துகள் தல!

English summary
Thala Ajith Kumar is celebrating his 44th birthday and his fans celebrating the same all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil