Happy Birthday Vijay...விஜய் பற்றி இதெல்லாம் யாருக்காவது தெரியுமா ?

சென்னை : உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ள நடிகர் விஜய் இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Thalapathy Interesting Facts | Vijay பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | *Celebrity |Filmibeat Tamil

விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒரு விதமாக கொண்டாடினால், விஜய் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர் தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட்டை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி மற்றொரு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகர், டான்சர், பாடகர், எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன், தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர், அவர் எந்த படங்களில் எல்லாம் நடித்துள்ளார், அதில் எத்தனை படங்கள் ஹிட், சொந்த குரலில் என்னென்ன பாடல்கள் பாடி உள்ளார், விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் இது போன்ற விஷயங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் விஜய் பற்றி பலரும் அறியாத, சில சுவாரஸ்யமாக தகவல்களை தான் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்க்க போகிறோம்.

 விஜய்யின் சம்பளம்

விஜய்யின் சம்பளம்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கு நடிகர்கள் பட்டியலில் தற்போது விஜய் தான் டாப். பீஸ்ட் படத்திற்காக அவருக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார், உச்ச நட்சத்திரம் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 90 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார்.

 சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

விஜய்க்கு படங்கள், விளம்பரங்கள் என ஆண்டுக்கு 150 கோடி வரை வருமானம் வருகிறது. விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 417 கோடி ரூபாய். விஜய்யின் வீட்டின் மதிப்பு மட்டும் 100 கோடிக்கும் மேல். தென்னிந்தியாவிலேயே மிக காஸ்ட்லியான கார்களை வைத்துள்ள நடிகர்களில் விிஜய்யும் ஒருவர். பிஎச்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஃபோர்டு முஸ்டான்ங், ஆடி, மினி சோப்பர் போன்ற கார்களை வைத்துள்ளார்.

ரஜினியின் தீவிர ரசிகர்

ரஜினியின் தீவிர ரசிகர்

நடிகர் விஜய், ரஜினியின் மிகப் பெரிய ஃபேன். ரஜினி என்ற ஒருவர் இல்லை என்றால் தான் நடிக்கவே வந்திருக்க முடியாது என அவரே பலமுறை கூறி உள்ளார். முதல் முறையாக ஆடிசன் போன போது கூட அண்ணாமலை டயலாக்கை பேசி தான் ஓகே ஆனதாக விஜய்யே தனது பேட்டியில் கூறி உள்ளார்.

பாசமுள்ள அண்ணன்

பாசமுள்ள அண்ணன்

விஜய்க்கு எத்தனை வசதிகள் இருந்தாலும் தீராத சோகம் என்றால் அது தங்கையின் மரணம் தான். விஜய்யின் தங்கை வித்யா 2 வயதில் உயிரிழந்தார். ஆனால் இப்போது வரை விஜய்யால் அதை மறக்க முடியவில்லை. தனது தங்கையின் நினைவாக தான் விஜய் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு விவி (வித்யா - விஜய்) ப்ரொடக்ஷன்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

 கெஸ்ட் ரோலில் விஜய்

கெஸ்ட் ரோலில் விஜய்

அக்ஷய் குமார் நடித்த ரெளடி ரத்தோர் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். விஜய் நடித்த பிளாக்பஸ்டர் படமான துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் ஹாலிடே என்ற பெயரில் அக்ஷய் குமார் ரீமேட் செய்துள்ளார்.

 மலையாள ஃபேன்ஸ்

மலையாள ஃபேன்ஸ்

தென்னிந்திய நடிகர்களிலேயே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அடுத்த படியாக, விஜய்க்கு தான் கேரளாவில் ஃபேன்ஸ் அதிகம். மலையாளி அல்லாத நடிகர் ஒருவருக்கு அதிக ஃபேன்ஸ் இருப்பதும் விஜய்க்கு தான்.

20 டைரக்டர்கள் அறிமுகம்

20 டைரக்டர்கள் அறிமுகம்

கடந்த 25 வருடங்களாக விஜய் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இதில் தமிழ் சினிமாவிற்கு கிட்டதட்ட 20 டைரக்டர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் விஜய். அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் விஜய் தான் நம்பர் ஒன்.

விஜய் வீட்டின் ரகசியம்

விஜய் வீட்டின் ரகசியம்

விஜய் அமெரிக்கா சென்றிருந்த போது Tom Cruise ன் பீச் ஹவுசை பார்த்துள்ளார். அது விஜய்க்கு மிகவும் பிடித்து போய் விட்டதாம். உடனடியாக அந்த வீட்டின் போட்டோக்கள், மாதிரி வடிவத்தை கேட்டு வாங்கி, நீலாங்கரையில் அதே போன்ற ஒரு பீச் ஹவுசை கட்டி விட்டார். தற்போது இங்கு தான் விஜய் வசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X