»   »  'இசைத்தளபதி', 'இசை நாயகன்'..ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்!

'இசைத்தளபதி', 'இசை நாயகன்'..ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் ஜி.வி.பிரகாஷ், இன்று தன்னுடைய 29 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இசை+நடிப்பு என இரட்டைக் குதிரையில் பயணிக்கும் ஜி.வி.பிரகாஷை ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர். இது தவிர இசைத்தளபதி என்னும் புதிய பட்டத்தையும் கொடுத்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் ரசிகர்கள் வேறு எப்படியெல்லாம் அவரை வாழ்த்தியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இசைத்தளபதி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசைத்தளபதி என்று ஜி.வி.பிரகாஷை வாழ்த்தியிருக்கிறார் பிரணவ்.

தெறி

தெறி இசையமைப்பாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று திலீப் குமார் வாழ்த்தியிருக்கிறார்.

சிக்குபுக்கு

சிக்குபுக்கு ரயிலே என்று ஆரம்பித்த ஜி.வி.பிரகாஷின் இசைப்பயணம் இன்று முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறது என சஞ்சய் வாழ்த்தியிருக்கிறார்.

மாஸ்

எப்போவும் போல மாஸா இருக்கணும் என்று ஜி.வி.பிரகாஷை வாழ்த்தியிருக்கிறார் ஜில்லா.

பொல்லாதவன்

பொல்லாதவன் பிஜிஎம் மியூசிக்கைப் பாராட்டி ஜிவி.பிரகாஷை வாழ்த்தியிருக்கிறார் சந்தோஷ்.

இதுபோல மேலும் பல ரசிகர்களின் வாழ்த்து மழையால் #happybirthdaygvpஎன்னும் ஹெஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாஷை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.வி.பிரகாஷ்...

English summary
Today Music Composer G.V.Prakash Celebrating his 29th Birthday. Now #happybirthdaygvp Trending Nationwide in Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil