For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொண்ணுங்கன்னா கேவலமா… மிரட்டும் வசனத்துடன்… பிரண்ட்ஷிப் டிரைலர் ரிலீஸ்!

  |

  சென்னை : ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

  பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாக ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கின்றனர்

  ஃப்ரெண்ட்ஷிப்பை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார்.

  கிங் நடிகர் படத்தில் இருந்து நீக்கப்படும் நம்பர் நடிகை? அப்டேட் கூட வராததுக்கு காரணம் இதானாம்!கிங் நடிகர் படத்தில் இருந்து நீக்கப்படும் நம்பர் நடிகை? அப்டேட் கூட வராததுக்கு காரணம் இதானாம்!

  ஹர்பஜன் சிங் ஹீரோவாக

  ஹர்பஜன் சிங் ஹீரோவாக

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிரண்ஷிப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, இவர் தமிழின் மீது வைத்திருந்த அளப்பறிய அன்பைப் பற்றி தான் நம் அனைவருக்கும் தெரியுமே. இந்நிலையில் தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாகி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

  செப்டம்பர் 17 ரிலீஸ்

  செப்டம்பர் 17 ரிலீஸ்

  ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இந்த திரைப்படத்தை இயக்கி உருவாகி வருகின்றனர். இந்த படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரண்ட்ஷிப் திரைப்படமானது செப்டம்பர் 17ம் தேதி தியேட்டர்களில் ரசிகர்கள் பார்வைக்கு விருந்தாக அமைய உள்ளது.

  லாஸ்லியா

  லாஸ்லியா

  பிரபல முன்னணி தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை பெற்ற லாஸ்லியா இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.

  பாடல்கள் ஹிட்

  பாடல்கள் ஹிட்

  லாஸ்லியா தேவாவுடன் இணைந்து பாடிய அடிச்சி பறக்கவிடுமா பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்களை லஹாரி மியூசிக் வாங்கி உள்ளது. பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே வெளியாக தயாராக இருந்த இப்படம் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போனது.

  டிரைலர்

  டிரைலர்

  இந்நிலையில்,இத்திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் மெக்கனிக்கல் படிக்கவர காரணமே அங்க பொண்ணுங்க வர மாட்டாங்கனுதான் என்று ஒரு வெறுப்பான உணர்வில் ஹர்பஜன் பேசுகிறார்.இதைடுத்து, பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா போச்சா என்று தொடங்கும் டைலாக்கும், கோயம்புத்தூர்ல சைலேத்திரபாபு செய்தது தான் சரி என்று வரும் வசனமும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

  டிக்கிலோனாவில்

  டிக்கிலோனாவில்

  மேலும், ஹர்பஜன் சிங் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா, ஷெரின், யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  ஜீ-5 ஓடிடியில்

  ஜீ-5 ஓடிடியில்

  டிச்கிலோனா திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹாக்கி வீராக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் 3 கெட்டப்பில் நடிக்கிறார். இப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக செப்டம்பர் 10ந் தேதி வெளியாக உள்ளது.

  English summary
  Actor Arya released the Tamil and Telugu trailer of the film which also has Action King Arjun in an important role and comedian Sathish playing Harbhajan's friend.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X