பிரதீப் ரங்கநாதன் டபுளா வந்தாலும் மோத ரெடி.. ஹரிஷ் கல்யாணும் தீபாவளிக்கு ஆஜர்.. டீசல் டீசர் தரம்!
சென்னை: லப்பர் பந்து படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எந்தவொரு படமும் இன்னமும் வரவில்லையே என்றும் இந்த ஆண்டு அவரது படமே வராதா என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டை படக்குழு உறுதி செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் தனது வீட்டில் சாமி கும்பிடும் புகைப்படங்களை காலையில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், சற்றுமுன் அவரது நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அமலா பால் ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர், யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் நடித்து வெளியான பியார் பிரேமா காதல் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தோனி தயாரிப்பில்: தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் வீரர் தல தோனி தயாரிப்பில் வெளியான எல்கேஜி படத்தில் நடித்தார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஸ்டார் படத்தில் கமிட்டாகி நடிக்காமல் போனது சர்ச்சையை கிளப்பியது. பார்க்கிங் திரைப்படம் தேசிய விருதே வென்றது ஹரிஷ் கல்யாணின் ரசிகர்களை ஹேப்பி ஆக்கியது.
சிக்ஸர் அடித்த லப்பர் பந்து: எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் ஹரிஷ் கல்யாணை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றும் களத்தில் லப்பர் பந்து வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் சிக்ஸர் மட்டுமின்றி நல்ல படம் என்கிற பாராட்டுக்களையும் பெற்றது. அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தான். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா என அனைவரது நடிப்பும் மிரட்டல் ரகம்.

டீசல் டீசர் ரிலீஸ்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தனது இல்லத்தில் விநாயகரை பயபக்தியுடன் வணங்கி எல்லாருமே நல்லா இருக்கணும் இறைவா என வேண்டிக் கொண்டார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படத்தின் டீசர் வெளியானது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தின் டீசர் அட்டகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் உடன் மோதல்: இந்த ஆண்டு தீபாவளிக்கு சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகாது என தெரிகிறது. துருவ் விக்ரமின் பைசன் படம் வெளியாகிறது. மேலும், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படமும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அனைத்து படங்களுமே ஆங்கில தலைப்பை கொண்டிருப்பது கூடுதல் தகவல்.
தீபாவளி போட்டி பலமா இருக்குமோ?: இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், ரஜினிகாந்த் என எந்தவொரு முன்னணி நடிகரின் படங்களும் வெளியாகவில்லை. கோலிவுட்டின் எதிர்காலம் என எதிர்பார்க்கப்படும் இளம் நடிகர்களின் படங்கள் தீபாவளி ரேஸில் மோத உள்ள நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











