»   »  ரஜினி அப்பா, தாத்தாவாக நடிக்கும் காலம் வந்துவிட்டதோ?

ரஜினி அப்பா, தாத்தாவாக நடிக்கும் காலம் வந்துவிட்டதோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பா, தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதோ?

லிங்காவில் நான் தோல்வி அடையவில்லை, வெற்றியை தள்ளி வைத்துள்ளேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லிங்கா மட்டும் அல்ல அதற்கு முன்பு வெளியான கோச்சடையான் படமும் ஓடவில்லை.

ரஜினிகாந்த் புகழ்பாடிய வினியோகஸ்தர்கள் லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட பணம் தருமாறு கோரினர்.

ரஜினி

ரஜினி

ரஜினியின் படங்கள் தோல்வி அடைகிறதே. அப்படி என்றால் மக்களுக்கு அவர் மீது உள்ள ஈர்ப்பு குறைந்துவிட்டதா, இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹீரோ

ஹீரோ

தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பதை விட்டுவிட்டு குணசித்திர வேடங்களிலும் ரஜினி நடிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வயதாகிவிட்டது

வயதாகிவிட்டது

ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ரஜினி பறந்து பறந்து சண்டை போடுவது, இளம்நடிகைகளுடன் டூயட் பாடுவதை பார்க்க இளம் தலைமுறையினர் விரும்புவது இல்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்டோர் தங்களுக்கு வயதான பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வெற்றியும் கண்டுள்ளனர் என்று வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

லிங்கா படத்தில் தனது மகள்களை விட குறைவான வயதான சோனாக்ஷி சின்ஹாவுடன் ரஜினி நடித்துள்ளார். தன்னை விட மிகவும் இளமையான அனுஷ்காவை காதலிக்கிறார். இதை எல்லாம் ஏற்க ரசிகர்கள் தயாராக இல்லை.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் உள்ளது. ஆனால் அவர் தான் நிலைமையை புரிந்து கொண்டு தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்தார் என்றால் நிச்சயம் அவர் தொடர்ந்து ஜொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Is it hightime for Superstar Rajinikanth to act in character roles rather than continuing to be a hero?
Please Wait while comments are loading...