»   »  த்ரிஷாவை அடுத்து ட்விட்டரை விட்டு வெளியேறிய விஷால்: காரணம் இதுவா?

த்ரிஷாவை அடுத்து ட்விட்டரை விட்டு வெளியேறிய விஷால்: காரணம் இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் பேசியதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில் அவர் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அலங்காநல்லூர் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது.

விஷால்

விஷால்

நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஷால் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் பேசவே இல்லை. யாரோ என் பெயரைக் கூறி தவறான தகவலை பரப்பியுள்ளனர் என விஷால் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரை திட்டுபவர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டர்

ட்விட்டர்

விஷாலை பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் அவர் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். அவர் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாகத் தான் விலகினாரா என தெரியவில்லை.

த்ரிஷா

த்ரிஷா

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ட்விட்டரை விட்டே வெளியேறினார். இந்நிலையில் விஷாலும் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.

English summary
Actor Vishal has left twitter at a time netizens are blasting him on social media accusing him of commenting against Jallikattu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil