Dhanush: ஒருவேளை இட்லி சாப்பிடக்கூட கஷ்டப்பட்டாரா தனுஷ்?.. கிளம்பிய பரிதாபங்கள்.. வைரலாகும் விசு வீடியோ!

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ் ஒருவேளை இட்லி சாப்பிடக் கூட சிறு வயதில் கஷ்டப்பட்டேன் என நேற்று நடைபெற்ற இட்லி கடை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், பலரும் அதை ட்ரோல் செய்து வருகின்றனர். என் குழந்தையால பேசவே முடியல, ஏம்மான்னு கேட்டவருக்கு போன வாரம் தான் பிறந்தது என கோபி சுதாகரின் பரிதாபங்கள் வீடியோவை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அந்த காலத்திலேயே இயக்குநராக இருந்த கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ் எப்படி ஒரு இட்லி சாப்பிடக் கூட காசு இல்லாமல், பூக்களை பறித்துக் கொடுத்தால் கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு இட்லி கடைக்கு சென்று இட்லி வாங்கி சாப்பிட்டார். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

Haters trolls Dhanush for his Idly Kadai speech but fans proves them wrong by sharing old Visu video
Photo Credit:

இந்நிலையில், மறைந்த இயக்குநரும் நடிகருமான விசு ஏற்கனவே ஒருமுறை தனுஷின் இளமை காலம் குறித்து பேசிய வீடியோவை ஷேர் செய்து தனுஷ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஹீரோக்களின் பில்டப் மேடைகளாக மாறும் ஆடியோ லாஞ்ச்: இசை வெளியீட்டு விழாவின் நாயகன் என்றாலே இசையமைப்பாளர்கள் தான். ஆனால், சமீப காலமாக முன்னணி நடிகர்கள் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக ஹீரோ வந்து நின்று தனது பெருமைகளையும் கஷ்டப்பட்ட கதைகளையும் பேசுவதும், அதற்கு முன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை மற்ற பிரபலங்கள் பலரும் ஹீரோவின் துதி பாடும் நிகழ்ச்சிகளாகவே இசை வெளியீட்டு விழாக்கள் மாறி வருகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் இசை வெளியீட்டு விழாக்கள் குறித்து கிளம்பி வரும் நிலையில், அவர்கள் பேசுவதும் அவர்களை பற்றி பேசுவதும் சோஷியல் மீடியாவை விவாதங்களை கிளப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இட்லி சாப்பிடக்கூட காசு இல்லை: இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் இட்லி சாப்பிடக் கூட காசு இல்லைன்னு தனுஷ் பேசுவார் பாருங்களேன் என ஏற்கனவே குபேரா ஆடியோ லாஞ்ச் வைபில் சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்த நிலையில், தனுஷ் அப்படியே பேசியது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கஷ்டப்பட்டதை குறித்து சொல்லாமல், எல்லாருமே கஷ்டப்பட்டுத்தான் வந்திருப்போம். வந்த இடத்தில் என்ன பண்ண வேண்டும் என்றுமோ அதை பண்ணினாலே போதும் என்று பேசியதையும் மேற்கோள் காட்டி கலாய்த்து வருகின்றனர். சிறு வயதில் கஷ்டப்பட்டு பூப்பறித்து இட்லி சாப்பிட்ட கதையை சொல்லி ரசிகர்களை எமோஷன் ஆக்கியிருந்தார்.

பரிதாபங்கள் ட்ரோல்: எனக்கு ஒரே ஒரு குழந்தை அவனால பேச முடியாது.. ஏன்? ஏன்னா. அவன் போன வாரம் தான் பொறந்தான்.. என் பைக்ல 1 லிட்டர் பெட்ரோல் போட்டா ஒரு லிட்டரு தான் சார் இருக்கு. இவன் குழந்தையால பேசவே முடியாது.. ஏன்? ஏன்னா இவனுக்கு குழந்தையே இல்லை என விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை கலாய்த்து கோபி சுதாகர் பேசிய பரிதாபங்கள் ட்ரோலை இட்லி கடை ஆடியோ லாஞ்சில் தனுஷ் புலம்பித் தள்ளியதற்கு ட்ரோலாக பயன்படுத்தி வருகின்றனர்.

வைரலாகும் விசு வீடியோ: தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1982ல் மணல் கயிறு டைரக்ட் பண்ணும் போது அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் அவர்கள் வீட்டில் டிவி கூட இருக்காது. என் அண்ணன் வீட்டுக்கு வந்துதான் வெள்ளிக்கிழமையான டிவி பார்ப்பாங்க. அதன் பின்னர் தான் ராஜ்கிரணை வைத்து படம் இயக்கி கஸ்தூரி ராஜாவாக மாறி சம்பாதித்து முன்னுக்கு வந்தார். அவருடைய குடும்பமும் நல்லா செட்டில் ஆனாங்க என விசு பேசிய வீடியோவை ஷேர் செய்து தனுஷ் பொய் எல்லாம் சொல்லவில்லை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். 1983ம் ஆண்டு தனுஷ் பிறந்த நிலையில், 1991ல் தான் இயக்குநராக கஸ்தூரி ராஜா மாறுகிறார். அதுவரை தனுஷ் சுமார் 8 வயது வரை கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருந்திருப்பார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X