»   »  சிம்புவின் ட்விட்டர் ப்ரொஃபைல் படத்தை பார்த்தீங்களா?

சிம்புவின் ட்விட்டர் ப்ரொஃபைல் படத்தை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து காளை மாட்டின் புகைப்படத்தை சிம்பு தனது ட்விட்டர் கணக்கின் ஃப்ரொபைல் படமாக வைத்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு தெரிவித்து வருகிறது.

Have you seen Simbu's twitter profile picture?

இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையை பார்த்தே ரசிகர்கள், தமிழர்களின் மனம் குளிர்ந்துவிட்டது. சிம்பு தமிழன்டா அதனால் தான் தமிழர்களின் வீர விளையாட்டிற்கு குரல் கொடுக்கிறார் என்று ஆளாளுக்கு பாராட்டிவிட்டனர்.

இந்த சூழலில் சிம்பு தனது ட்விட்டர் கணக்கின் ஃப்ரொபைல் படமாக காளை மாட்டின் புகைப்படத்தை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

English summary
Actor Simbu has kept a photo of a bull with wordings I support Jallikattu as his profile picture in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil