Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரஜினியின் இதயம் சட்டென்று நின்ற அந்த ஒரு நிமிடம்...!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு இதயம்தான். ஆனால் அவருக்காக துடிப்பது பல கோடி இதயங்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் உடல் நலமின்றி மருத்துவனையில் சேர்க்கப்பட்டபோது பல கோடி இதயங்கள் துடித்துத் துவண்டு போயின.
ஆனால் ரஜினியின் இதயம் உண்மையிலேயே ஒரு விநாடி நின்று போனது உங்களுக்குத் தெரியுமா.. அதை சொன்னதே ரஜினிதான்.
ஆம். எந்திரன் படப்பிடிப்பின்போதுதான அது நடந்ததாம். அந்த அனுபவம் கேட்கவே திரில்லாகவும், திகிலாகவும் இருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் இந்த சம்பவத்தை விளக்கியுள்ளார் இப்போது.

எந்திரன்....
அது ஒரு சண்டைக் காட்சி. ரஜினியைச் சுற்றிலும் ஸ்டண்ட் கலைஞர்கள். ரஜினிக்கு டூப் போடலாம் என்றால் அது சரிப்பட்டு வராது என்ற கருத்து இருந்தது.

நானே பண்றேன்...
ரஜினியும் கூட தனது வயதைப் பொருட்படுத்தாமல், நானே போடுவேன் பைட் என்று கூறி விட்டார்.

ரயிலை முந்தணும் சிட்டி...
சிட்டி ரோபோ ரயில்வே டிராக்கில் தனக்கு முன் அடுத்த ட்ராக்கில் வேகமாகச் செல்லும் ரயிலை பின்தொடர்ந்து முந்த வேண்டிய காட்சி. காலில் சக்கரம் கட்டிய ரஜினி பேலன்ஸ் செய்தபடி வேகமாக ட்ராக்கில் செல்ல வேண்டும்.

ரஜினியே நடித்தார்...
இந்தக் காட்சியின்போதுதான் ரஜினியை வைத்து சில குளோஸப் ஷாட்டுகளை எடுத்தனர். அதில்தான் டூப் போட முடியாமல் ரஜினியே நடித்தார்.

ரிஸ்கான காட்சி...
மிகவும் அபாயகரமான காட்சி அது. குறிதத் வேகத்தில் ரஜினி தனது காலில் கட்டிய சக்கரத்துடன் தண்டவாளத்தில் வேகமாக போக வேண்டும். சேப்ட்டியான வழிமுறைகளை கையாண்டபோதிலும் கூட ரிஸ்க் அதிகம். இருந்தாலும் ரஜினி அருமையாக நடித்து முடித்தார்.

நானும் சின்ன பையன் தான்...
ஷாட் முடிந்து கீழே இறங்கி வந்த ரஜினி சார் என்னிடம் தனக்கே உரிய சிரிப்புடன் சிரித்தபடிகூறுகையில், ‘உங்களை மாதிரியே சின்னப் பையன் போல நான் உணர்கிறேன்' என்றார்.

இதயமே நின்னுடுச்சிப்பா...
ஆனால அவர் அடுத்து சொன்னதுதான் எங்களைத் தூக்கி வாரிப் போட்டது. அதாவது அவர் சொன்னார்...நான் இந்த காட்சியில் நடித்தபோது உண்மையிலேயே ஒரு விநாடி எனது இதயத் துடிப்பு நின்றதைப் போல உணர்ந்தேன்... காரணம் என்னை இழுத்துச் சென்ற ரயில் எஞ்சின் ஒரு கட்டத்தில் ரொம்ப வேகமாகப் போனதை உணர்ந்தேன்.. அப்புறம் சமாளித்துக் கொண்டேன் என்றார். நாங்க ஷாக் ஆகிட்டோம்,' என அவர் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தலைவா விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதீங்க... அதை எங்க 'லிட்டில் ஹார்ட்' தாங்காது...!