சூர்யாவின் மிரட்டலான எதற்கும் துணிந்தவன்...ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ ரிலீஸ் எப்போ தெரியுமா ?

சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ எப்போது ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

3 ஆண்டுகளுக்கு பின் சூர்யா படம்

3 ஆண்டுகளுக்கு பின் சூர்யா படம்

சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் ரிலீசாகி செம ஹிட் அடித்த நிலையில், கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சூர்யா படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. சூர்யாவின் முதல் பான் இந்தியன் படமாக இது ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா வக்கீல் ரோலில் நடித்துள்ள படம்.

எதிர்பார்ப்பை தூண்டும் கதை

எதிர்பார்ப்பை தூண்டும் கதை

பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. அதோடு பெண்களை சாதாரணமாகவும், இழிவாகவும் நினைப்பவர்களுக்கு அச்சத்தை தரும் படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும் என சொல்கிறார்கள். அதோடு மாற்றத்திற்கு தயாராகுங்கள் என சூர்யா எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அதிகரித்துள்ளது.

ஓடிடி ரிலீசுக்கும் தயாரா

ஓடிடி ரிலீசுக்கும் தயாரா

பட ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மிரட்டலான டிரைலரை தொடர்ந்து ப்ரொமோ வீடியோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது. எதற்கும் துணிந்தவன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகியன வாங்கி உள்ளன.

Recommended Video

3 வது படிச்சா பொண்ணு இப்போ எனக்கு Jodi|Suriya Speech in Etharkkum Thunindhavan Trailer launch Event
ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ எப்போ

ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ எப்போ

இந்த ஆண்டின் முதல் மெகா பட்ஜெட் படமாக வெளியான அஜித்தின் வலிமை படம் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதியுடன் தியேட்டரில் ரிலீசாகி வசூலை குவித்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வம் காரணமாக இந்த படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதே போல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ மார்ச் 10 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X