»   »  ஹீரோக்களே... இயக்குநர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

ஹீரோக்களே... இயக்குநர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா அழிவை நோக்கி செல்ல முக்கியமான காரணம் படைப்பாளிகளை விட அரிதாரம் பூசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதும்தான்... பைரஸி உள்ளிட்ட மற்ற காரணங்களை பற்றி பேசும் தயாரிப்பாளர்கள் இதுபற்றி வாய் திறக்க மாட்டார்கள். காரணம் ஹீரோக்களை வளர்த்துவிடுவதே தயாரிப்பாளர்கள் தானே?

ஒரு ஹீரோ ஒரே ஒரு ஹிட் தந்தால் போதும் அதன் பின்னர் எத்தனை ஃப்ளாப்கள் கொடுத்தாலும் மார்க்கெட்டிலேயே நீடிப்பார். ஆனால் எத்தனை ஹிட் கொடுத்த இயக்குநராக இருந்தலௌம் சரி ஒரே ஒரு ஃப்ளாப் போதும். அவரை வீட்டுக்கு அனுப்ப... இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். எனவே தான் இப்போது இருக்கும் ஹீரோக்கள் தங்களை உருவாக்கும் இயக்குநர்களை மதிப்பதே இல்லை.

விக்ரம்

விக்ரம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டு இன்னமும் சும்மாவே இருக்கிறார் இயக்குநர் திரு. டைட்டில் கூட கருடா என்று வைத்தாகி விட்டது. அதன் பின் ஒப்புக்கொண்ட நான்கு படங்களை முடித்துவிட்டார் விக்ரம். விக்ரமை ஆளாக்கி விட்டதே அவரது நண்பரும் இயக்குநருமான தரணிதான். ஆனால் தரணியும் விக்ரமுக்காக காத்த்த்த்துக்கொண்டே இருக்கிறார்.

விஜய்

விஜய்

விஜய்க்கு குஷி என்ற மெகா ஹிட்டைத் தந்தவர் எஸ்ஜே.சூர்யா. அவரே காத்திருந்து வெறுத்துப்போய் நடிப்புப் பக்கம் போய்விட்டார். விஜய்க்கு இரண்டு சூப்பர் ஹிட்களைத் தந்த ஏஆர்.முருகதாஸையே விஜய் கண்டுகொள்ளவில்லை. அவர் மகேஷ்பாபு பக்கம் போய்விட்டார். பைரவா படுதோல்வியால் மீண்டும் முருகதாஸ் பக்கமே சரண்டர் ஆகியிருக்கிறார். பேரரசு உள்ளிட்ட பலர் விஜய்க்காக காத்திருக்கிறார்கள்.

தனுஷ்

தனுஷ்

சிம்புதேவனை இரண்டு ஆண்டுகள் காக்க வைத்தவர் தனுஷ். கடைசியில் முடியாது என்று சொல்லிவிட அருள்நிதியை வைத்து இயக்கினார். தனுஷ் லேட்டஸ்டாக காக்க வைத்து அல்வா கொடுத்தது வெற்றிமாறனுக்கு. 'படம் எப்படி போனால் என்ன... தான் சொல்வதை கேட்கும் இயக்குநர்கள் வேண்டும்' என்பதால் வெற்றி இயக்குநர்களையே கிடப்பில் போட்டுவிட்டு மாரி மாதிரியான ஃப்ளாப் படத்தை செகண்ட் பார்ட் எடுப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மிக வேகமாக வளர்ந்த சிவகார்த்திகேயன் தன்னை தொடக்க காலத்தில் தாங்கிய தனுஷையும் பாண்டிராஜையும் ஏமாற்றினார். இருவரும் கால்ஷீட் கேட்டபோது என் ரேஞ்சே வேற... என்று சொல்லி மறுத்துவிட்டார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனுக்கு அடுத்து படம் தருவதாகச் சொன்னார். இதுவரை எந்த தகவலும் இல்லை. சிவாவுக்காக ஆல்ரெடி மூன்று இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆர்யா

ஆர்யா

ஆர்யாவுக்கு கதை சொல்லிவிட்டு காத்திருந்த சலீம் பட இயக்குநர் நிர்மல் குமார் இப்போது அரவிந்த்சாமி, த்ரிஷாவை வைத்து சதுரங்க வேட்டை பார்ட் 2 இயக்க சென்றுவிட்டார். தன்னை வைத்து மீகாமன் படம் இயக்கிய மகிழ் திருமேனிக்கும் கால்ஷீட் தருவதாக சொல்லியிருந்த ஆர்யா இப்போது அவரை கழட்டிவிட மகிழ்திருமேனி அருண்விஜய் பக்கம் போயிருக்கிறார்.

ஜிவி.பிரகாஷ்

ஜிவி.பிரகாஷ்

இந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வரவு ஜிவி.பிரகாஷ். யர வந்தாலும் அட்வான்ஸை வாங்க்கிக்கொண்டிருந்தவர் பாலா, வெற்றிமாறன் படங்களில் கமிட் ஆனபிறகு அப்படியே நேர் எதிர். இந்த இயக்குநர்களுக்காக ஆல்ரெடி கமிட் ஆகியிருந்த இயக்குநர்களை கழட்டிவிட்டது தான் கொடுமை. அப்படி கழட்டி விடப்பட்ட இயக்குநர்களுள் லொள்ளு சபா ராம்பாலாவும் ஒருவர்.

ஒரு இயக்குநர் நினைத்தால் புதுமுகத்தையோ அல்லது வெளிமாநில நடிகர்களையோ பயன்படுத்தி ஹிட் கொடுத்து இந்த ஹீரோக்களின் முகத்தில் கரியை பூசலாம். ஆனால் அதற்கு இயக்குநர்கள் வலுவாக இருக்க வேண்டும்.

-ஆர்ஜி

English summary
Nowadays Tamil heroes are not giving respect and fails to fulfill their commitments to their directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil