»   »  துனியாவுக்கு மோதும் ஹீரோக்கள்

துனியாவுக்கு மோதும் ஹீரோக்கள்

Subscribe to Oneindia Tamil

கர்நாடகத்தைக் கலக்கி வரும் துனியா என்ற கன்னடப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தமிழ் ஹீரோக்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

சில நேரங்களில் பிற மொழிப் படங்கள் தமிழ் ஹீரோக்களையும், இயக்குநர்களையும் வெகுவாக கவர்ந்து விடும். உடனடியாக அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவும்.

இப்படித்தான் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான பொம்மரிலு படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நடந்தது. கடைசியில் வென்றது பிரகாஷ் ராஜ்தான்.

அதுபோலவே இப்போது கன்னட சூப்பர் ஹிட் படமான துனியாவும் தமிழ் திரையுலகை வெகுவாக கவர்ந்துள்ளது. சூரி என்ற இளம் இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். புதுமுகம் விஜய்யும், ரேஷ்மியும் ஜோடியாக நடித்துள்ளனர்.

பெரும் வெற்றியைப் பெற்றுள்ள துனியாவை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து விட்டு வெகுவாகப் பாராட்டினாராம். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு விஷால் இப்படத்தைப் பார்த்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு விஜய் இப்படத்தைப் பார்த்தார். படத்தை எடுத்த விதம், கதையைச் சொன்ன விதம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். என்ன செலவானாலும் சரி, இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி விடுங்கள் என தனது தரப்பிடம் சொல்லியுள்ளாராம் விஜய்.

ஆனால் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, ஏற்கனவே இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய்தான் நடிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சமீப காலத்தில் வெளியான மெகா ஹிட் படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள்தான். சந்திரமுகி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக். அதுபோலவே விஜய் நடித்த போக்கிரியும் தெலுங்கு போக்கிரியின் ரீமேக்தான்.

கோடம்பாக்கம் அண்ணாச்சிகளே, சரக்கு தீர்ந்து போச்சா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil