»   »  ரொம்ப நல்லவனாக இருந்து.... கோட்டைத் தாண்டி வந்து.... கெட்டவனாக மாறிய அருண் விஜய், கார்த்திக்!

ரொம்ப நல்லவனாக இருந்து.... கோட்டைத் தாண்டி வந்து.... கெட்டவனாக மாறிய அருண் விஜய், கார்த்திக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சமீப காலமாக ஹீரோக்கள் பலர் வில்லன்களாக நடித்து பாராட்டுக்களை வாங்கி வருகின்றனர். ரசிகர்களிடையேயும் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆரம்ப காலத்தில் வில்லன்களாக இருந்த பல நடிகர்கள், பின்னாளில் முன்னணி நாயகர்களாக மாறி புகழ் பெற்றனர். ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் அப்படி திரைக்கு வந்தவர்களே. ஆனால், தற்போது அந்த நிலை தலைகீழாகி, முன்னணி ஹீரோக்கள் பலர் வில்லன்களாகி வருகின்றனர்.

அந்தவகையில், இந்த வருடம் வெளியான ஐ, என்னை அறிந்தால், அனேகன் ஆகிய படங்களின் வில்லன்கள், கடந்த காலங்களில் சினிமாவைக் கலக்கிய முன்னாள் ஹீரோக்கள்.

சுரேஷ் கோபி...

சுரேஷ் கோபி...

ஐ படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ் கோபி மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஆனால், ஐ படம் மூலம் அவர் வில்லனாக மாறி இருக்கிறார்.

அருண்விஜய்...

அருண்விஜய்...

அதேபோல் ‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அருண் விஜய், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். என்னை அறிந்தால் தான் அவர் வில்லனாக நடித்த முதல்படம்.

வரவேற்பு...

வரவேற்பு...

ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமாக இப்படத்திற்குக் கிடைத்துள்ளது. எனவே, தொடர்ந்து அவர் வில்லனாக நடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

நவரச நாயகன்...

நவரச நாயகன்...

தனுஷ் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அனேகன்' படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சிறந்த நடிகர் என்று பெயர் பெற்ற இவர் அனேகன் படம் மூலம் வில்லனாக நடித்து, தனது திறமையை மேலும் நிரூபித்திருக்கிறார்.

ரகுமான், சுமன்...

ரகுமான், சுமன்...

இதேபோல், ரகுமான், சுமன் உள்ளிட்ட நடிகர்களும் ஹீரோக்களாக இருந்து வில்லன்களாக மாறியவர்கள் தான்.

பாபி சிம்ஹா...

பாபி சிம்ஹா...

ஆனால், இவர்களில் இருந்து சற்று மாறுபட்டு ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து மிரள வைத்த பாபி சிம்ஹா தற்போது நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
In Tamil cinema, the recent trends shows that some of the hero actors are turning in to villains.
Please Wait while comments are loading...