»   »  சிரஞ்சீவி படத்துக்கு வந்த "மெகா" சோதனை.. ஹீரோயின் கிடைக்கலையாம்!

சிரஞ்சீவி படத்துக்கு வந்த "மெகா" சோதனை.. ஹீரோயின் கிடைக்கலையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படத்துக்கு இன்னும் ஹீரோயின் கிடைக்கவில்லை என்பதுதான் டோலிவுட்டின் ஹாட் டாபிக்.

நீண்ட இடைவேளைக்குப் பின் நடிப்புக்குத் திரும்பிய சிரஞ்சீவி, தற்போது 'கத்தி' ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராம்சரண் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வி.வி.விநாயக் இயக்கி வருகிறார்.

சிரஞ்சீவியின் 150 வது படம், ராம் சரண் தயாரிப்பு, கத்தி ரீமேக் என ரசிகர்கள் காத்திருக்கும் விஷயங்கள் இப்படத்தில் இருந்தாலும், படக்குழு இன்னும் ஹீரோயின் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

நயன்தாரா

நயன்தாரா

முதலில் நயன்தாரா இப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதற்காக அவருக்கு 4 கோடிகள் சம்பளம் பேசியிருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறி நயன்தாரா இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

நயன்தாராவைத் தொடர்ந்து அனுஷ்காவிடம் சென்ற படக்குழுவுக்கு அங்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அனுஷ்காவும் சிரஞ்சீவி பட வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

இந்தி ஹீரோயின்கள்

இந்தி ஹீரோயின்கள்

இதனால் படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் பிரபல இந்தி ஹீரோயின்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சிரஞ்சீவி வயது காரணமாக இந்தி ஹீரோயின்களும் பிடிகொடுக்கவில்லை.

2 ஹீரோயின்கள்

2 ஹீரோயின்கள்

இருந்தாலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக 2 முன்னணி ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்திட படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறதாம். இதனைக் கேள்விப்படும் ரசிகர்கள் மெகா ஸ்டார் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா? என்று வருத்தப்படுகிறார்களாம்.

English summary
Sources said Heroine not yet Finalized for Chiranjeevi's Come Back movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil