»   »  நன்றாகப் பார்.. இதே போல ஒரு ஹோலியில்தான் சிவாஜி ராவ் சந்திரமுகியாக..ஸாரி.. ரஜினிகாந்த்தாக மாறினார்!

நன்றாகப் பார்.. இதே போல ஒரு ஹோலியில்தான் சிவாஜி ராவ் சந்திரமுகியாக..ஸாரி.. ரஜினிகாந்த்தாக மாறினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட இந்தியாவிலும், வட இந்தியர்கள் வாழும் இடங்களிலும் இன்று ஹோலிப்பண்டிகை வண்ணமயமாக கொண்டாடப்படும் வேளையில், தென்னாட்டு, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கும், இந்த ஹோலிக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உள்ளது.. தெரியுமா உங்களுக்கு?!

அதாவது "ரஜினிகாந்த்" இன்றுதான் பிறந்தார்.. டிசம்பர் 12ம் தேதிதானே ரஜினி பிறந்தார்.. என்று குழப்பமாக இருக்கிறதா?.

இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் தொடர்ந்து படித்தால் குழப்பம் விலகும்.

சிவாஜி ராவ் கெய்க்வாட்

சிவாஜி ராவ் கெய்க்வாட்

ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று அனைவருக்கும் தெரியும்.

புது அவதாரம் எடுத்த நாள்

புது அவதாரம் எடுத்த நாள்

இந்த சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என்ற பெயருக்கு மாறிய நாள்தான் இந்த ஹோலி தினம்.

1975ம் ஆண்டு

1975ம் ஆண்டு

கடந்த 1975ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை அன்று இயக்குனர் கே.பாலச்சந்தர் சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்த ரஜினியை அழைத்து, சந்திரகாந்த், ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் இந்த பெயர்கள் உள்ளன. இதில் சந்திரகாந்த்தை படத்துக்குப் பெயராக வைத்து விட்டேன் (மேஜர் சந்திரகாந்த்), ஸ்ரீகாந்த்தை ஒரு நடிகருக்கு வைத்து விட்டேன். மீதம் உள்ளது ரஜினிகாந்த்தான். அதை உனக்கு சூட்டுகிறேன் என்று கூறி ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டினாராம்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

இப்படித்தான் அபூர்வ ராகங்களில் நடிக்க வந்த ரஜினிகாந்த் அறிமுகத்தின்போது ரஜினிகாந்த் என்ற பெயருடன் வெள்ளித் திரையில் ரசிகர்களுக்கு அறமுகமாகி அவர்களது மனத்திரையில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

ரஜினிக்கு ஹோலி

ரஜினிக்கு ஹோலி

இப்படி ரஜினி என்ற பெயர் ஹோலி தினத்தில் தனக்குக் கிடைத்தது என்பதால் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நாளாக ஹோலி எப்போதுமே உள்ளது.

பாலச்சந்தரிடம் ஆசி

பாலச்சந்தரிடம் ஆசி

ரஜினிகாந்த் ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்றும் தன்னை ரஜினியாக்கிய பாலச்சந்தரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

தொலைபேசியில் ஆசி

தொலைபேசியில் ஆசி

இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை தான் ஹோலி அன்று பாலச்சந்தரை சந்திக்கவில்லையாம். ஹோலி தினத்தன்று பாலச்சந்தரை நேரில் சந்திக்க முடியாத தருணங்களில் தொலைபேசியில் அழைத்தாவது ஆசி பெற்று விடுவாராம்.

குரு இல்லையே

குரு இல்லையே

ஆனால் இம்முறை அவரது குரு பாலச்சந்தர் இல்லை. சமீபத்தில்தான் பாலச்சந்தர் மரணமடைந்தார். எனவேதான் இம்முறை ஹோலி பண்டிகையை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடவில்லை ரஜினிகாந்த் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

English summary
Holi is a special day for Superstar Rajinikanth? It was during this festival day, back in 1975, that a certain bus conductor called Sivaji Rao Gaekwad became ‘Rajinikanth.’

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil