»   »  ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளைத் திருடுகிறார்கள்- கமல் ஹாஸன்

ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளைத் திருடுகிறார்கள்- கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹாலிவுட்காரர்கள் நம் படங்களிலிருந்து கதைகளைத் திருடுகிறார்கள் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

ஹைதராபாதில் இன்று செய்தியாளர்களுக்கு கமல் ஹாஸன் அளித்த பேட்டி:

என் படங்கள் வெளியாக தாமதமாவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. விஸ்வரூபம் படத்தை ஆறு மாதத்தில் முடித்தேன். சில பிரச்சினைகளால் அது தாமதம் ஆனது.

விஸ்வரூபம்-2 படத்தை மூன்று மாதத்தில் முடித்தேன். தயாரிப்பு தரப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படங்களும் முடிந்துள்ளது.

ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது கஷ்டமா?

ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது கஷ்டமா?

விதவிதமான கேரக்டர்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எனக்கு புதிது அல்ல. மரோசரித்திரா, மன்மதலீலை படங்களில் ஒரே நேரத்தில் நடித்து இருக்கிறேன்.

ரமேஷ் அரவிந்தை வைத்து இயக்குவது ஏன்?

ரமேஷ் அரவிந்தை வைத்து இயக்குவது ஏன்?

நடிப்பு, இயக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது சிரமமானது. இந்த படத்தில் மேக்கப்புக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டிய இருந்தது. ரமேஷ் அரவிந்தும் நானும் ஒரே மாதிரியான எண்ண ஒட்டத்தை உடையவர்கள்.

உத்தம வில்லனில் பாலச்சந்தர்

உத்தம வில்லனில் பாலச்சந்தர்

பாலச்சந்தர் நடித்ததால் உத்தமவில்லன் படத்தை என்னுடைய சொத்தைப் போல் கருதுகிறேன். நடிகன் என்ற வாழ்க்கையே அவர் கொடுத்ததுதான். பாலசந்தர் இல்லாவிட்டால் நான் நடிகனாகி இருக்க மாட்டேன். உதவி இயக்குனராகவோ, டான்ஸ் மாஸ்டராவோ இருந்து இருப்பேன்.

பிடித்த நடிகர்கள்

பிடித்த நடிகர்கள்

அது நிறைய பேர் இருக்கிறார்கள். தெலுங்கு பட உலகில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என பலர். ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கி இருந்தபோது அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தேன். பக்கத்து அறையில் சத்தம் கேட்டது. போய் பார்த்தேன். அங்கு என்.டி.ராமராவ் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். நான் தேவை இல்லாமல் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டேன். எஸ்.வி.ரங்கராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்கு பிறகு வரவில்லை. எஸ்.வி.ரங்காராவ் ஒரு மகாநடிகர். அவர். மாதிரி நடிகர்கள் வராதது வேதனை அளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ் மாதிரி, நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்

கதைத் திருட்டு

கதைத் திருட்டு

ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளை திருடுகிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சுவாதி முத்யம் படத்தின் கதையை, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் பாரஸ்ட் ஹம்ப் என்ற படமாக எடுத்தார்கள். அவர்கள் மீது நாம் வழக்குதான் போட வேண்டும்.

English summary
Kamal Hassan says that Hollywood film makers are stealing Tamil movie contents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil