»   »  30, 35, 32, 45.. மம்முட்டி சார் கேட்டீங்களா இந்தக் கூத்தை!

30, 35, 32, 45.. மம்முட்டி சார் கேட்டீங்களா இந்தக் கூத்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வயது குறித்து வெளிநாட்டவர்கள் அளித்த பதில்களைக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தை சுற்றி வருகிறது.

அதில் பலரும் 30- 35 இவற்றுக்குள் தான் மம்முட்டியின் வயது இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர். ஒரே ஒருவர் அதிகபட்சமாக 45 வயது இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பிரபலமான நடிகர் மம்முட்டி. 'மலையாள சூப்பர் ஸ்டார்', 'என்றும் எவர்கிரீன்' இப்படியெல்லாம் புகழப்படும் மம்முட்டியின் உண்மையான வயது என்ன என்று அவரின் புகைப்படத்தைக் காட்டி சில வெளிநாட்டவர்களிடம் அவரின் ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

மம்முட்டி கூலிங்கிளாஸ் அணிந்து காட்சியளிக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் அவரின் வயதில் பாதியைத் தான் பதிலாக கூறியிருக்கின்றனர்.

பெரும்பாலானோரின் பதில் 35 என்பதாகவே இருந்தது ஒருவர் மட்டும் அதிகபட்சமாக 45 வயது இருக்கலாம் என்று கூறினார். பின்னர் அனைவரிடமும் மம்முட்டியின் உண்மையான வயதைக் கூற பலரும் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

மம்முட்டியின் உண்மையான வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது. ஜாலியான பதில்கள் அடங்கிய இந்த வீடியோவை நீங்களும் பாருங்களேன்!

English summary
How Old is Mammootty 35 or 65? Malayalam Superstar Mammootty video either with the age of the Internet, has been around for Answers about the Foreigners.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil