»   »  அமீர்கானைத் தொடர்ந்து நிர்வாண சர்ச்சையில் சிக்கிய ஹிருத்திக் ரோஷன்

அமீர்கானைத் தொடர்ந்து நிர்வாண சர்ச்சையில் சிக்கிய ஹிருத்திக் ரோஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு படத்தைப் பற்றி பரபரப்பாக பேசவேண்டும் என்றால் ஏதாவது சர்ச்சையை கிளப்பவேண்டும் என்று நடிகர், நடிகைகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஹிருத்திக் ரோஷனும் இதற்கு விதிவிலக்கல்ல. பி.கே படத்தில் நிர்வாண போஸ் கொடுத்து அமீர்கான் சர்ச்சை திரியை கொளுத்திப் போட்டது போல மொகஞ்சதாரோ படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளாராம் ஹிருத்திக்.

அஷுதோஷ் கவுரிகர் இயக்கும் படம் மொகஞ்சதாரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிசாசு நாயகி பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

பண்டைய கால காதல்

பண்டைய கால காதல்

பண்டைய நாகரீகங்களில் ஒன்றான மொகஞ்சதாரோவைப் பற்றிய படமாக எடுக்கப்பட உள்ளது. அந்த நாகரீகத்தில் இருக்கும்படியான காதலை கற்பனை கலந்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

நிர்வாண நடிப்பு

நிர்வாண நடிப்பு

சமீபத்தில் நடிகர்கள் நிர்வாணமாக நடிப்பது அதிகரித்து வருகிறது. பி.கே. படத்தில் அமீர்கான் நிர்வாணமாக நடித்திருந்தார். அதேபோல ஹிருத்திக் ரோஷனும் மொகஞ்சதாரோ படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

சிந்துசமவெளி நாகரீகம்

சிந்துசமவெளி நாகரீகம்

சிந்து சமவெளி நாகரீகத்தில் நடக்கும் கதை என்பதால் வித்தியாசமான உடற்கட்டுடன் முதல்பகுதியில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

சர்வதேச பயிற்சியாளர்

சர்வதேச பயிற்சியாளர்

இதற்காக சர்வதேச பயிற்சியாளர் ஜோஸ்வா கைலே பேக்கர், ஹிருத்திக் ரோஷனுக்கு பயிற்சியளித்து வருகிறாராம். ஹிருத்திக்கின் நிர்வாண போஸ் சென்சாரில் தப்புமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Aamir Khan might have invited a lot of flak over the almost nude scene in the 2014 release ‘PK’, but that doesn’t stop Hrithik Roshan from attempting something similar.
Please Wait while comments are loading...