»   »  முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ

முதுகெலும்பு காணாப் போச்சா, தேடித் தரட்டா: பிரபல நிறுவனத்தை விளாசிய ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது அனுமதி இல்லாமல் தனது மற்றும் தன் மகன்களின் புகைப்படத்தை பயன்படுத்திய பிரபல பிராண்டை நடிகர் ரித்திக் ரோஷன் விளாசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் எப்பொழுதுமே ஸ்டைலாக உடை அணிவார். அவரை போன்றே அவரது மகன்கள் ரிஹான் மற்றும் ரிதானும் அழகாக, ஸ்டைலாக உடை அணிகிறார்கள்.

இந்நிலையில் ரித்திக் மற்றும் அவரது மகன்களை வைத்து ஹலோ பத்திரிகை போட்டோஷூட் நடத்தியது.

புகைப்படம்

புகைப்படம்

ஹலோ பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் ரித்திக், ரிஹான் மற்றும் ரிதான் அழகாக இருந்தனர்.

டாமி

டாமி

பிரபல துணி பிராண்டான டாமி ஹில்ஃபிகர் ரித்திக் மற்றும் அவரது மகன்கள் ஹலோ பத்திரிகைக்கு போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் தங்கள் பிராண்டு உடை அணிந்திருப்பதாக விளம்பரம் செய்தது.

ரித்திக்

டாமியின் பொய் விளம்பரத்தை பார்த்த ரித்திக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, டியர் டாமி, நான் உங்கள் பிராண்டை அணியவில்லை என் குழந்தைகள் உங்களை விளம்பரம் செய்யவில்லை. உங்கள் முதுகெலும்பு காணாமல் போயிருந்தால் அதை தேடிக் கொடுக்க என்னிடம் சிறந்த அணி உள்ளது என விளாசியுள்ளார்.

மன்னிப்பு

ரித்திக் ட்விட்டரில் விளாசியதை பார்த்த டாமி நிறுவனம் ட்வீட்டியிருப்பதாவது, டியர் ரித்திக், விளம்பரப்படுத்த வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மன்னித்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.

English summary
Bollywood actor Hrithik Roshan blasted Tommy Hilfiger by tweeting, 'Dear Tommy.I dont wear u, neither do my kids endorse u.If u hv lost ur spine I hv a great team 2help u find it.Please (hil)figure urself out.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil