Just In
- 1 min ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 45 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 59 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தளபதி விஜய்யோட டயட் பிளான் என்னப்பா.. தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கும் பாலிவுட் ஹீரோ!
சென்னை: நடிகர் விஜய்யின் டயட் பிளானை தெரிந்து கொள்ள வேண்டும் என பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் கூறியுள்ளது தளபதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ச் விளம்பரம் ஒன்றிற்காக நேற்று சென்னை வந்த ஹிரித்திக் ரோஷன், பிரபல மாலில் ரசிகர்களுடன் ஆடி பாடி அமர்களப்படுத்தினார்.
மேலும், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில், தளபதி விஜய் குறித்து, மிகுந்த ஆர்வத்துடன் பேசி உள்ளார்.
|
சென்னையில் ஹிரித்திக்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், நேற்று சென்னையில் உள்ள மாலில், வாட்ச் விளம்பரத்துக்காக வருகை தந்து, சென்னை வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பிரபல மாலில், ஹிரித்திக் ரோஷனை பார்த்த ரசிகர்கள், மொத்தமாக சூழ்ந்து கொண்டு, அவர் அருகில் நின்று புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.
|
ரசிகர்களுடன் டான்ஸ்
மேலும், சென்னை ரசிகர்களை பார்த்து சந்தோஷப்பட்ட பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், விழாவின் இறுதியில், ரசிகர்களுடன், சில ஸ்டெப்கள் போட்டு, உற்சாகமாக ஆடியது, ரசிகர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஹிரித்திக் ரோஷன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
|
விஜய் டயட்
பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹிரித்திக் ரோஷனிடம், தளபதி விஜய் பற்றி கேட்கப் பட்ட கேள்விக்கு, விஜய்யின் எனர்ஜி தன்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும் என்றும், அப்படி நடனம் ஆடுவதற்கு முன்னதாக, என்ன விதமான டயட்டை விஜய் ஃபாலோ பண்ணுகிறார் என்பதை தெரிந்து கொள்ள தனக்கு ஆர்வமாக இருக்கிறது என்றும் ஹிரித்திக் ரோஷன் பேசியுள்ளார்.

ரசிகர்கள் ஹேப்பி
தளபதி விஜய் குறித்து, பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன், தெரிவித்திருப்பதை அறிந்த தளபதி ரசிகர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்தும், ஹிரித்திக் ரோஷனுக்கு வாழ்த்து சொல்லி மீம்களை போட்டும் வருகின்றனர். சூப்பர் டான்ஸரான ஹிரித்திக், விஜய் நடனத்தை பாராட்டியது தளபதி ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.

கையில் கிளவுஸ்
சென்னைக்கு வந்த ஹிரித்திக் ரோஷன் தனது கைகளில் கருப்பு நிற கிளவுஸ் அணிந்திருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளவா அல்லது, வாட்ச் விளம்பரம் என்பதால், அந்த வாட்ச் தெளிவாக தெரிவதற்காகவா என்ற பேச்சுக்களும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன.