»   »  ஷாருக்கானுடன் ஒப்பிடுகையில் நான் நல்லா பாடுவேன்: சல்மான் கான்

ஷாருக்கானுடன் ஒப்பிடுகையில் நான் நல்லா பாடுவேன்: சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாருக்கானுடன் ஒப்பிடுகையில் நான் நன்றாகத் தான் பாடுவேன் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஜியா கான் தற்கொலை வழக்கில் கைதான சூரஜ் பஞ்சோலி மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டி ஆகியோரை வைத்து ஹீரோ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கூறுகையில்,

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுடன் ஒப்பிடுகையில் நான் நான்றாக பாடுவேன். இதை ஷாருக்கே ஒப்புக் கொள்வார்.( ஷாருக்கானும், சல்மானும் என்னதான் பொது இடங்களில் கட்டிப்பிடித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் இன்னும் பகை இருக்கத் தான் செய்கிறது என்று கூறப்படுகிறது.)

முத்தம்

முத்தம்

படத்தில் ஹீரோ, ஹீரோயின் இடையேயான நெருக்கத்தை காண்பிக்க முத்தக் காட்சி ஒன்றும் அவசியம் இல்லை. ஹீரோ படத்தில் முத்தக் காட்சியே கிடையாது என்றார் சல்மான் கான்.

சல்மான்

சல்மான்

ஹீரோ படத்தில் முத்தக் காட்சியை வைத்திருந்தார்களாம். அந்த காட்சியில் சூரஜ் மற்றும் ஆதியாவும் நடித்தார்களாம். இது குறித்து அறிந்த சல்மான் கடுப்பாகி என் படத்தில் முத்தக் காட்சி இருக்கக் கூடாது என்று அந்த காட்சியை நீக்கிவிட்டாராம்.

சூரஜ்

சூரஜ்

நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை போலீசார் சூரஜ் பஞ்சோலியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் அவர் ஹீரோவாகிவிட்டார்.

English summary
They may have kissed and made up in the recent past but old rivalries rarely die, or so you'd say. Speaking at a promotional event for his co-production Hero, Salman Khan said that he is a better singer in comparison to his arch-rival-turned-friend Shah Rukh Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil