»   »  புதிய ஜீவா!

புதிய ஜீவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

தந்தை ஆர்.பி.செளத்ரி மிகப் பெரிய தயாரிப்பாளர் என்பதால் மிக ஈசியாக சினிமாவுக்கு வந்தவர் ஜீவா. முதலில் டான்ஸ், காலேஜ் ஸ்டூடண்ட் என்று வழக்கமாக புதுமுக ஹீரோவின் வேலைகளைத் தான் செய்து வந்தார்.

ஆனால், அமீர் இயக்கிய ராம் அவரை புரட்டிப் போட்டது. ஜீவாவுக்குள் இருந்த நல்ல நடிகனை வெளியே கொண்டு வந்து காட்டினா அமீர். அதிலிருந்து ஜீவாவுக்குள் பெரும் மாற்றம். அடுத்தடுத்து சவாலான படங்களையே ஏற்று வருகிறார்.

கற்றது தமிழ் படத்தில் மிகச் சிறப்பான பாத்திரத்தை செய்த ஜீவாவுக்கு அடுத்து ராமேஸ்வரம் படத்திலும் மிக சவாலான கேரக்டர்.

இலங்கை அகதிகள், முகாம், அதில் வலிகளுக்குள் முளைக்கும் காதல் என எல்லாமே ராமேஸ்வரத்தில் நடக்கும் கதை தான் இந்தப் படம்.

படத்தின் கதையை ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஜீவாவிடம் சொல்லி விட்டார்களாம். ஆனால் இலங்கை அகதிகள் பற்றிய கதை என்பதால் அந்த கேரக்டரை உணர்ந்து நடிக்க வேண்டும் என்பதால் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாராம்.

ராமேஸ்வரம் பகுதியில் இலங்கை அகதிகளின் முகாமிற்கு சென்று அங்கு அவர்கள் படும் பாடு, இலங்கையில் அவர்கள் பட்டபாடு ஆகியவற்றை உன்னிப்பாக கேட்டும் நேரில் கண்டும் தெரிந்து கொண்டாராம்.

இந்தப் படத்தில் இவருக்கு காஸ்டியூமே அழுக்கு கைலியும், கிழிந்த சட்டையும் தான். (பாட்டு சீன், ட்ரீம்ஸ்களில் தான் கலர் கலர் சட்டைகள்)

இது பற்றி ஜீவா கூறுகையில், நான் என்னுடைய இயல்பான நடிப்பை தான் வெளிப்படுத்துகிறேன். என்னை எவருடனும் ஒப்பீடு செய்தது கிடையாது. உண்மையில் எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் கூட கிடையாது.

பணத்தையோ, விருதுகளையோ குறி வைத்து நான் நடிப்பதில்லை. நல்ல படம், நல்ல மெசேஜ் சொல்லும் படங்களில் நான் இருக்க வேண்டும். அதில் நன்றாக நடிக்க வேண்டும், அவ்வளவு தான் என்கிறார்.

Read more about: ameer jeeva rameswaram rbchowdhry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil