»   »  கமல், மணி படத்தில் நடிக்கவில்லை-ரஜினி

கமல், மணி படத்தில் நடிக்கவில்லை-ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil


நான் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Click here for more images

சிவாஜியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து யார் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் படத்தில் நடிக்கப் போகிறார், இவர் படத்தில் நடிக்கப் போகிறார் என்று சரமாரியாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கமல் தயாரிப்பு பிளஸ் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும் ஒரு செய்தி சமீபத்தில் கிளம்பியது. ஆனால் இதை ரஜினி மறுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடித்து வெளிவந்துள்ள சிறுத்த படத்தை ரஜினி போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் ரஜினி பார்த்து ரசித்தார்.

படத்தைப் பார்த்த பின்னர் தெலுங்குத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினி சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மணிரத்னம்-கமல் கூட்டணியில் நான் நடிப்பதாக பத்திரிகைகளில் தகவல்கள் வந்துள்ளது. இது தவறான செய்தியாகும். எனது அடுத்த படத்திற்கு நான் நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல கதை அமைந்தால் புதிய படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நான் பிரபல இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சிரித்தேன் என்று ரஜினி கூறினார்.

இதன் மூலம் ரஜினியின் அடுத்த படம் குறித்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி. அடுத்து என்ன செய்தி வரப் போகிறதோ?

Read more about: kamal manirathnam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil