»   »  நிஜ வாழ்க்கையில் நான் "சித்தார்த் அபிமன்யு" இல்லை... அரவிந்த்சாமி

நிஜ வாழ்க்கையில் நான் "சித்தார்த் அபிமன்யு" இல்லை... அரவிந்த்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி ஒருவன் மூலம் வில்லனாக தனித்து அடையாளம் காணப்பட்டுள்ளார் அரவிந்த்சாமி. கிளைமாக்ஸில் ஒரு வில்லன் சாகக்கூடாது என பார்வையாளர்கள் பிரார்த்திப்பது தனி ஒருவனில் தான் என அரவிந்த்சாமியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தளபதியில் ரஜினியின் தம்பியாக அறிமுகமாகி, ரோஜா, பம்பாய் என அடுத்தடுத்து நாயகனாக வெற்றிப் படங்களைத் தந்தவர் அரவிந்த்சாமி. இடையில் கொஞ்ச காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்தவர், மணிரத்னத்தில் கடல் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.


அதனைத் தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத ஸ்வீட் அண்ட் க்யூட் வில்லனாக தனி ஒருவனில் தோன்றி மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்து விட்டார் அரவிந்த்சாமி.


பாராட்டு மழை....

பாராட்டு மழை....

சொந்தத் தொழிலைக் கவனித்து வந்ததால், எளிதில் யாராலும் தொடர்பு கொள்ள இயலாதபடி இருந்தார் அரவிந்த்சாமி. ஆனால், தனி ஒருவன் ரிலீசானதில் இருந்து அனைத்து போன்களையும் அட்டண்ட் செய்து ரசிகர்களின் பாராட்டுக்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்.
ஐ லவ்யூ ஸ்வீட் ஹார்ட்ஸ்...

ஐ லவ்யூ ஸ்வீட் ஹார்ட்ஸ்...

அதேபோல், தனது சமூகவலைதளப் பக்கத்திலும் ரசிகர்களின் பாராட்டு மழையில் அரவிந்த்சாமி நனைந்து வருகிறார். ‘எல்லோரது பாராட்டிற்கும் நன்றி, ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்ஸ்' என தன் மகிழ்ச்சியை அதில் அவர் பகிர்ந்து வருகிறார்.


அடுத்து என்ன படம்...

அடுத்து என்ன படம்...

இந்நிலையில், தனி ஒருவன் படம் பார்த்து அரவிந்த்சாமியைப் பாராட்டும் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் அவர்? அதில் என்ன கதாபாத்திரம் அவருக்கு? என்பது தான்.
டியர் டாட்...

டியர் டாட்...

இதற்கான விடையை தினசரி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி. அடுத்து இந்தியில் டியர் டாட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தனி ஒருவன் மாதிரியே இதிலும் வித்தியாசமான வேடமாம் அவருக்கு.


நிச்சயம் வில்லனில்லை...

நிச்சயம் வில்லனில்லை...

தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரசித்து செய்த போதும், அடுத்தடுத்து வில்லன் வேடம் ஏற்க விருப்பமில்லையாம் அரவிந்த்சாமிக்கு. எனவே, அடுத்து தமிழில் ஹீரோ அல்லது குணச்சித்திர வேடத்தில் அரவிந்த்சாமியை எதிர்பார்க்கலாம்.


நான் வேறு.... நடிப்பு வேறு

நான் வேறு.... நடிப்பு வேறு

நிஜவாழ்க்கையில் சித்தார்த் அபிமன்யு -அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்திற்கு ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, ‘கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை. நிஜத்தில் நான் அவ்வளவு பழி வாங்கும் எண்ணம் கொண்டவன் இல்லை. இது ஒரு புதிய அனுபவம். நான் வேறு, நடிப்பு வேறு" என அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.


English summary
Actor Arvindsamy has said that he is not a villain in real life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil