»   »  என் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேச வெட்கம் வெட்கமாக இருக்கு: ஷாருக்கான்

என் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேச வெட்கம் வெட்கமாக இருக்கு: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்க வெட்கமாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன், சுஹானா என பதின்வயது குழந்தைகளும், ஆப்ராம் என்ற 3 வயது மகனும் உள்ளார்கள். படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலிவடத் தவறாதவர் ஷாருக்கான்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி கற்றுக் கொடுப்பது குறித்து ஷாருக் கூறுகையில்,

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி

என் அம்மா என்னை உட்கார வைத்து செக்ஸ் கல்வி பற்றி பேசினார். ஆனால் எனக்கு என் குழந்தைகளிடம் செக்ஸ் கல்வி பற்றி பேச முடியாது. எனக்கு வெட்கமாக உள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அப்படி இருக்கும்போது என்னால் என் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேச முடியவில்லை. அதனால் அந்த டாபிக் பற்றி இதுவரை அவர்களிடம் பேசியது இல்லை.

படம்

படம்

நானும் என் குழந்தைகளும் சேர்ந்து படம் பார்க்கும்போது அவர்களை பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் கல்வி பற்றி என்னை விட அதிகம் தெரியும் போல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும் போல.

நண்பன்

நண்பன்

நான் என் குழந்தைகளிடம் ஒரு நண்பனை போன்று பழகி வருகிறேன். நான் ஏதாவது கேள்வி கேட்டு அவர்கள் எங்களுக்கு தெரியாது என்றால் நான் பதில் கேள்வி கேட்க மாட்டேன்.

English summary
Shahrukh Khan made a very candid confession about his kids in a recent interview. The actor, who is known as the king of romance, said that he is very shy in real life and that's why he can't talk about sex education with his three children Aryan, Suhana and AbRam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil