»   »  ஓகேஓகே படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார்: உதயநிதி ஸ்டாலின்

ஓகேஓகே படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார்: உதயநிதி ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் போன்று டான்ஸ் ஆட விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராக கோலிவுட் வந்து ஹீரோவானவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது நயன்தாரா, சந்தானம் ஆகியோருடன் சேர்ந்து நண்பேன்டா படத்தில் நடித்துள்ளார். அவர் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்துள்ளது இது இரண்டாவது முறை ஆகும்.

இந்நிலையில் சினிமா பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவை எனக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருந்தே தெரியும். அவர் ஒரு நல்ல நண்பர்.

ஓகேஓகே

ஓகேஓகே

ஓகேஓகே படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் கேட்டோம். ஆனால் அப்போது அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்ததால் நடிக்க மறுத்துவிட்டார்.

இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல்

நயன்தாரா மீண்டும் நடிக்க வந்து ராஜா ராணி படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டேன். இதையடுத்து அவரை அணுகி இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்க கேட்டேன். அவரும் சம்மதித்து நடித்துக் கொடுத்தார்.

தமிழ்

தமிழ்

படப்பிடிபப்பு தளத்தில் நயன்தாரா அனைவரிடமும் நன்றாக பழகுவார். தமிழில் நன்கு பேசுவார்.

விஜய்

விஜய்

தற்போதுள்ள நடிகர்களில் நான் விஜய்யை ரோல் மாடலாக பார்க்கிறேன். அவர் போன்று டான்ஸ் ஆட ஆசைப்படுகிறேன் என்றார் உதயநிதி.

English summary
Udhayanidhi Stalin told that he would love to dance like Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil