»   »  யார் என்ன சொன்னா எனக்கென்ன, 'ஐ டோன்ட் கேர்': விஷால்

யார் என்ன சொன்னா எனக்கென்ன, 'ஐ டோன்ட் கேர்': விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

ராஜினாமா

ராஜினாமா

என் அணியினரின் கையெழுத்துடன் ராஜினாமா கடிதம் தயாராக உள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று, நான் அளித்த வாக்குறுதிகளை ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் என் பதவியை ராஜினாமா செய்வேன்.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டபோதும் பலர் என் மீது புகார் தெரிவித்தனர். அப்போதும் நான் அமைதியாக இருந்து தேர்தலில் வெற்றி பெற்று அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தேன். தற்போதும் அதே தான்.

கடமை

கடமை

நான் என் கடமைகளில் கண்ணும் கருத்துமாய் உள்ளேன். யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தை டிஜிட்டல் மயமாக்க உள்ளேன். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு ஒழுங்கு இல்லை. அதை முறைப்படுத்துவேன்.

படம்

படம்

சங்க வேலைகளால் என் நடிப்பு பணி பாதிக்கப்படுவது இல்லை. சங்க வேலைகளோடு சேர்த்து நான் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எங்களுக்கு இருக்கும் நெட்வொர்க்கிற்கு எந்த வேலையாக இருந்தாலும் சில மணிநேரங்களில் முடித்துவிடுவோம் என்றார் விஷால்.

English summary
Actor Vishal who is contesting in the producers' council election said that he doesn't care about who says what.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil