»   »  ரித்திக் பட ஷூட்டிங்கில் மயங்கி மயங்கி விழும் படக்குழுவினர்

ரித்திக் பட ஷூட்டிங்கில் மயங்கி மயங்கி விழும் படக்குழுவினர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் படங்களில் அல்ல வேறு இடத்தில் தான் நிர்வாணமாக இருப்பேன் என பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தற்போது அஷுதோஷ் கோவாரிக்கரின் இயக்கத்தில் மொஹன்ஜதரோ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேர பல நடிகைகள் போட்டி போடுகையில் அந்த வாய்ப்பு பூஜாவுக்கு கிடைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ரித்திக் ரோஷன் அனைவரையும் அதிர வைக்கும் காட்சி ஒன்றில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

நிர்வாணம்

நிர்வாணம்

பி.கே. படத்தில் ஆமீர் கான் நிர்வாணமாக நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இந்நிலையில் மொஹன்ஜதரோ படத்தில் ரித்திக் ரோஷன் நிர்வாணமாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

ரித்திக்

ரித்திக்

மொஹன்ஜதரோ படத்தில் ரித்திக் நிர்வாணமாக நடிக்கவில்லையாம். இதை அவரே தெரிவித்துள்ளார். நான் படங்களில் அல்ல வேறு இடங்களில் தான் நிர்வாணமாக இருப்பேன் என்கிறார் ரித்திக்.

மொஹன்ஜதரோ

மொஹன்ஜதரோ

மொஹன்ஜதரோ படத்தின் படப்பிடிப்பு பாலைவனப் பகுதியில் நடந்து வருகிறது. பாலைவனத்தில் மணல் புயல் வீசுவதால் அதை தாங்க முடியாமலும், வெப்பத்தை தாங்க முடியாமலும் படக்குழுவினர் மயங்கி விழுந்து வருகிறார்களாம்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ரித்திக் ரோஷன் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்று பாலிவுட் மக்கள் காதோடு காது வைத்தது போன்று பேசி வந்தனர். இந்த பேச்சு காற்று வாக்கில் ரித்திக் ரோஷன் காதுகளையும் எட்டியது. நான் இந்த ஆண்டு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளேன் என்று கூறி அனைத்து கணிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரித்திக்.

பிங்க் பாந்தர் 2

பிங்க் பாந்தர் 2

பிங்க் பாந்தர் ஹிட் ஹாலிவுட் படத்தின் இரண்டாம் பாகமான பிங்க் பாந்தர் 2 படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அந்த படத்தில் ரித்திக் ரோஷனும் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் ரித்திக்.

English summary
Actor Hrithik Roshan is finding it tough to shoot for ‘Mohenjo Daro’ in dust storms. However, he is happy that the "film is progressing fantastically".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil