»   »  நான் ஏன் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன் தெரியுமா?: வடிவேலு

நான் ஏன் ரஜினியின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன் தெரியுமா?: வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் பாசம் எல்லாம் இல்லை என வைக்கைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் கழித்து வடிவேலு விஷாலின் கத்திச் சண்டை படத்தில் முழுநேர காமெடியனாக நடித்துள்ளார். படத்தில் வித்தியாசமாக விக் வைத்துக் கொண்டு வரும் வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து வடிவேலு கத்திச் சண்டை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

விஷால்

விஷால்

சில பெரிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் ஏற்க மறுத்துவிட்டு விஷாலின் கத்திச் சண்டையில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என கேட்கிறார்கள். விஷால் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் பாசம் உள்ளதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

நிறைய ஸ்டார்கள்

நிறைய ஸ்டார்கள்

நிறைய ஸ்டார்கள் உள்ள படங்களில் நடிக்க விரும்பவில்லை. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதனால் தான் ரஜினி சாரின் லிங்கா படத்தில் நடிக்க மறுத்தேன்.

லிங்கா

லிங்கா

லிங்கா படத்தில் இரண்டாம் பாதியில் அதுவும் ஒரு சில நிமிடங்களே வரும் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார்கள். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்பதால் முடியாது என்றேன்.

கத்திச் சண்டை

கத்திச் சண்டை

கத்திச் சண்டை படத்தில் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அண்மை காலமாக சோகத்தில் மூழ்கியிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த படம் மகிழ்ச்சியை அளிக்கும்.

English summary
Vadivelu said that he has accepted to act in Kaththi Sandai not because he has personal affection for Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil