»   »  ரஜினியின் போன் நம்பர் கேட்கும் தைரியம் எனக்கில்லை!- அக்ஷய் குமார்

ரஜினியின் போன் நம்பர் கேட்கும் தைரியம் எனக்கில்லை!- அக்ஷய் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை என்று இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ரஜினிகாந்துக்கு நாட்டின் உயர்ந்த பத்மவிபூஷண் விருதினை அறிவித்தது. கலைத் துறையில் ரஜினியின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் தரப்பட்டுள்ள விருது இது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

I don't have the guts to ask Rajinikanth his number - Akshay Kumar

ரஜினியுடன் எந்திரன் 2.ஓ படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமாரிடம் கேட்டபோது, "அவருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி சாரின் போன் நம்பர் என்னிடம் இல்லை. அவரிடம் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

2.ஓ படத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

English summary
Akshay Kumar said that he could not congratulate Rajinikanth, who was selected for Padma Vibhushan award, as he did not have "guts" to ask the south megastar his contact number.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil