»   »  முத்தக் காட்சியா ஆளை விடுங்க...தெறித்து ஓடும் மா.கா.பா ஆனந்த்

முத்தக் காட்சியா ஆளை விடுங்க...தெறித்து ஓடும் மா.கா.பா ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஹீரோவாக நடித்து வரும் நவரச திலகம் படத்தில் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே உடனான முத்தக் காட்சிகளை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் மா.கா.பா ஆனந்த்.

இயக்குநர் காம்ரன் இயக்கத்தில் மாபாகா ஆனந்த் ஹீரோவாகவும், ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாகவும் நடித்து வரும் படம் நவரச திலகம்.


படத்தில் ஹீரோ மா.கா.பா. ஆனந்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இளைஞனாகவும், ஸ்ருஷ்டி டாங்கே மருத்துவக் கல்லூரி மாணவியாகவும் நடித்து வருகிறார்கள்.


நவரச திலகம்

நவரச திலகம்

மா.கா.பா ஆனந்த், ஸ்ருஷ்டி டாங்கே நடித்து வரும் திரைப்படம் நவரச திலகம், இயக்குநர் காம்ரன் இப்படத்தை இயக்கி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.


முத்தக்காட்சி வேண்டாம்

முத்தக்காட்சி வேண்டாம்

நவரச திலகம் குறித்து இயக்குநர் காம்ரன் கூறும்போது " படத்தில் ஓரிடத்தில் முத்தக்காட்சி வைக்கப்பட இருந்தது. அந்த காட்சியில் நடிக்க சிருஷ்டி டாங்கே தயாராக இருந்தார். ஆனால் மா.கா.பா.ஆனந்த் நடிக்க மறுத்ததால், அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது" என மாபாகா ஆனந்த் முத்தக்காட்சியை தவிர்த்தது பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.


வீட்ல யார் அடி வாங்குறது

வீட்ல யார் அடி வாங்குறது

இது குறித்து படத்தின் ஹீரோ மா.கா.பா ஆனந்த்திடம் கேட்டபோது "வீட்டுல அடி வாங்க முடியாது பாஸ், இப்பதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுவும் ஆரம்பகட்டம் வேற எடுத்தோவொடனயே எதுக்கு ரிஸ்க். கொஞ்ச கொஞ்சமா போவோம்.


பாட்டு சீன்னா ஓகே

பாட்டு சீன்னா ஓகே

"பாட்டு சீன்ல ஒரு ஃப்ளோவுல வந்தா ஓகே, தனியா கிஸ் சீன்'னா வீட்ல அடி பிரிச்சுருவாய்ங்க. அதான் நடிக்க மறுத்துட்டேன். அதுவும் சீன் வேற கொஞ்சம் கசமுசாவா இருந்துச்சு பாஸ்" என்கிறார்.


இதுக்கெல்லாம் பயந்தா எப்படி?


English summary
Actor Ma.Ka.Pa Anand Avoid Kissing Scenes in His Upcoming Film Navarasa Thilagam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil