»   »  எந்த மதத்தையும் விமர்சிக்க நான் படமெடுப்பதில்லை! - கமல் ஹாஸன்

எந்த மதத்தையும் விமர்சிக்க நான் படமெடுப்பதில்லை! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்த மதத்தையும் விமர்சிக்க நான் படமெடுப்பதில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, ஜெயின் அல்லது சீக்கியர் அனைவரும் எனது குடும்பத்தினரே என்றார் கமல் ஹாஸன்.

கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் வரும்

மே முதல் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

சி கல்யாண் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதையொட்டி செய்தியாளர் சந்திப்புக்கு ஹைதராபாதில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பேசுகையில், "உத்தம வில்லன் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்தோம். மிக அற்புதமாக வந்துள்ளது.

வழக்குகள்

வழக்குகள்

இந்தப் படத்துக்கு எதிராக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அவற்றை நீதிமன்றம் பரிசீலித்து தள்ளுபடி செய்துவிட்டது.

நாங்கள் எங்கள் வேலைகளைச் செய்கிறோம். நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்.

எல்லா மதங்களும்...

எல்லா மதங்களும்...

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயினர்கள் என எந்த மதத்தவராக இருந்தாலும் எனது குடும்ப உறுப்பினர்கள்தான். எந்த தனி நபரையும் விமர்சிக்க நான் படமெடுக்கவில்லை.

அரசியல் தெரியாது

அரசியல் தெரியாது

எனக்கு அரசியல் கூடத் தெரியாது. அரசியல் செய்ய படம் எடுக்காதவன் நான். ஆனால் சிலர் என்னை ஏன் குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மாதிரி சூழல்களில் கோபப்பட வேண்டாம் என என் ரசிகர்களுக்கு எப்போதுமே நான் சொல்வேன்.

கலைஞன் கதை

கலைஞன் கதை

இந்தக் கதை ஒரு கலைஞனின் வாழ்க்கை. இந்த நூற்றாண்டு கலைஞனுக்கும் 8-ம் நூற்றாண்டு கலைஞனுக்குமிடையிலான ஒரு தொடர்பைச் சொல்லும் படம் இது.

என் குருநாதர் கே பாலச்சந்தர், மூத்த இயக்குநர் கே விஸ்வநாத் ஆகியோருடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

டைரக்ஷன் கஷ்டம்

டைரக்ஷன் கஷ்டம்

இந்தப் படத்தில் நடித்ததுடன் தயாரிப்பில் பங்கேற்றுள்ளேன், திரைக்கதையும் எழுதியுள்ளேன். இந்த வேலைகளோடு இயக்கத்தை கவனிப்பது கஷ்டமாக இருந்ததால்தான் ரமேஷ் அரவிந்திடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தேன். அவர் மிகச் சிறப்பாக அந்தப் பணியைச் செய்துள்ளார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தொடர்ந்து பூஜா குமார், ஆன்ட்ரியாவுடன் நடிப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. அவர்கள் நடிப்பை நான் விரும்புகிறேன். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்," என்றார்.

English summary
Kamal Hassan says that he never makes movies to criticise any person or religion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil