நிறைய குடிக்கிறேன்...கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ்ட் போட்ட டாப் ஹீரோ
மும்பை : கையில் சரக்கு பாட்டிலை வைத்தபடி போஸ் கொடுத்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் தெலுங்கு டாப் ஹீரோ விஜய் தேவரகொண்டா. இதனால் என்ன ஆயிற்று இவருக்கு என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
தெலுங்கில் இளம் பெண்களில் ட்ரீம் பாயாக இருக்கக் கூடியவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, நோட்டா படங்களுக்கு பிறகு பான் இந்தியன் நடிகராக பல இளம் பெண்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் விஜய் தேவரகொண்டா.

ராஷ்மிகாவுடன் டேட்டிங்கா
விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மும்பையில் ஓட்டல் ஒன்றில் இரவு ஒன்றாக உணவருந்தி விட்டு, ஒன்றாக வந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவின. மும்பையில் பல பகுதிகளில் இவர்கள் ஒன்றாக சுற்றி வந்ததாக கூறப்பட்டது.

கடுப்பான ராஷ்மிகா
இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வதந்தி பரவியது. இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் சென்று வருவதாகவும் வந்த தகவலை ராஷ்மிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முட்டாள்தனமான கருத்து. விஜய் தேவரகொண்டா என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட் என கூறி வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.

நிறைய குடிக்கிறேன்
இந்நிலையில் ராஷ்மிகாவுடன் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது போட்டிருந்த அதே புலி தோல் டிசைன் சட்டையுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. கையில் சரக்கு பாட்டிலுடன், கலைந்த தலை முடி, குழப்பமான முகத்துடன் இருக்கும் அந்த ஃபோட்டோவுடன், கடந்த ஒரு வாரமாக நிறைய குடிக்கிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

ஏன் இவர் இப்படி ஆகிட்டார்
இந்த ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை இந்த ஃபோட்டோவை ராஷ்மிகா தான் எடுத்திருப்பாரோ. அவர் தானே விஜய் தேவரகொண்டாவுடனேயே சுற்றி வந்து கொண்டிருந்தார். இவருக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஆயிட்டார் என பலரும் பலவிதமாக சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.
Recommended Video

இருவரும் பிஸி
விஜய் தேவரகொண்டா தற்போது புரி ஜெகந்நாத் இயக்கும் பான் இந்தியன் படமான Liger படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குத்துச் சண்டையின் கடவுள் என போற்றப்படும் மைக் டைசனும் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து வருகிறார். அதே சமயம் ராஷ்மிகா, தான் நடித்த புஷ்பா மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











