»   »  விரைவில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் நான் இருப்பேன்: அருண் விஜய்

விரைவில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் நான் இருப்பேன்: அருண் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் தானும் வருவேன் என்று அருண் விஜய் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

முறை மாப்பிள்ளை படம் மூலம் நடிகர் ஆனவர் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமார். 1995ம் ஆண்டு நடிக்க வந்தபோதிலும் அவருக்கு இதுவரை எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது பெயரை அருண் விஜய் என மாற்றிக் கொண்டார்.

I'll be in Ajith, Vijay, Suriya list: Says Arun Vijay

பாண்டவர் பூமி, இயற்கை போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்த போதும் அவரது சினிமா பாதை கரடு முரடாகவே உள்ளது. இந்நிலையில் தான் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். தனது சினிமா வாழ்க்கையில் இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என நினைக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என்னை அறிந்தால் படம் என்னுடைய துவக்கம். நான் பலருக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது. எனக்கு பதில் என் படங்கள் அவர்களுக்கு பதில் சொல்லும். விரைவில் நான் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் இருப்பேன். விரைவிலேயே எனக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றார்.

English summary
Arun Vijay told that he will soon be in Ajith, Vijay, Suriya, Vikram list.
Please Wait while comments are loading...