»   »  'பாகுபலி 2' படத்தில் நானா?: சூர்யா விளக்கம்

'பாகுபலி 2' படத்தில் நானா?: சூர்யா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:பாகுபலி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து எடுத்த பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாகுபலியின் வெற்றியைப் பார்த்து பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்டே மிரண்டுபோய் உள்ளது.

Suriya

இந்நிலையில் பாகுபலியின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெளியிடுகிறார் ராஜமவுலி. அதற்கான வேலைகளில் அவர் பிசியாக உள்ளார். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

பாகுபலியின் சிங்கமா, அடடே சூப்பராக இருக்குமே என அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து சூர்யாவிடமே கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் கூறுகையில்,

பாகுபலி 2 படத்தில் நான் நடிக்கவில்லை. இது குறித்து என்னுடன் யாரும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Suriya has told that he is not acting in Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil