»   »  நான் 'அவர்' இல்லை, 'அவர்' ரேஞ்சுக்கும் இல்லை: துல்கர் சல்மான்

நான் 'அவர்' இல்லை, 'அவர்' ரேஞ்சுக்கும் இல்லை: துல்கர் சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என் தந்தையுடன் என்னை ஒப்பிடுவதில் நியாயம் இல்லை. என் தந்தையிடம் இருக்கும் மேஜிக் ஈர்ப்பு என்னிடம் இல்லை என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தந்தை வழியில் நடிகனாகியுள்ளார். மலையாள திரையுலகில் தனக்கென ஒரு பெயர் எடுத்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது அவரை மம்மூட்டியுடன் ஒப்பிடுகிறார்கள்.

I'm not HIM: Says Dulquer Salman

இது குறித்து துல்கர் கூறுகையில்,

ஒவ்வொரு நடிகரும் வித்தியாசமானவர். இந்நிலையில் என்னை என் தந்தையுடன் ஒப்பிடுகிறார்கள். நான் அவர் அளவுக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவரிடம் இருக்கும் அந்த மேஜிக் ஈர்ப்பும் என்னிடம் இல்லை.

அவருடன் என்னை ஒப்பிடுவது நியாயம் இல்லை என்றார்.

துல்கர் சல்மான் நடித்துள்ள ஜோமோன்டே சுவிசேஷங்கள் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dulquer Salman said that he is not as entertaining as his father. Dulquer feels that it is unfair to compare his with Mammootty, who is one of the finest actors of Indian cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil