»   »  'ரஜினி சார், நான் ஸ்டார் அல்ல.. உங்கள் ரசிகன்!'- ஷாரூக்கான்

'ரஜினி சார், நான் ஸ்டார் அல்ல.. உங்கள் ரசிகன்!'- ஷாரூக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி புகழ் பாடும் பாலிவுட் நடிகர்களில் ஷாரூக்கானுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.

மற்ற நடிகர்கள் ரஜினியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இவர் ரஜினிக்கு சல்யூட் என லுங்கி டான்ஸ் பாடலை தன் படத்தில் வைத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். விளைவு... அந்தப் பாடல் இடம்பெற்ற அவரது சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்துக்கு தமிழகத்தில் ஏக வசூல்!

தனது ரா ஒன் படத்தில் ரஜினியை ஒரு காட்சியில் தோன்ற வைத்து 'கிரேட் தலைவர்' என்று புகழ்ந்தார்.

I'm not a star, your fan: SRK to Rajinikanth

கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ஷாரூக், "தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி," என்றார்.

இப்போது மீண்டும் ரஜினியின் புகழ் பாடியுள்ளார் ஷாரூக். அவரது நடிப்பில் உருவாகியுள்ள லேட்டஸ்ட் இந்திப் படம் ‘ஃபேன்'. வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் ‘FAN Anthem' என்ற பெயரில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

இப்பாடல் ரசிகர் ஒருவர் தனது மனம் கவர்ந்த நடிகரை நினைத்து பாடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை இந்தி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி மற்றும் தமிழில் வெளியிட்டுள்ளார் ஷாரூக்கான். இப்பாடலின் தமிழ் பதிப்பை நேற்று ட்விட்டரில் வெளியிட்ட ஷாருக்கான், "ரஜினி சார், நான் ஸ்டார் அல்ல. உங்கள் எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவன். இதில் நான் பெருமிதம் கொள்கிறேன், தலைவா," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா

மேலும் இந்தப் பாடலின் மராத்தி வடிவத்தை வெளியிட்டு. அதை சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த தேசமே மகாத்மா காந்தி, ரஜினிகாந்த், டெண்டுல்கர் போன்ற சாதனையாளர்களுக்கு ரசிகர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Bollywood actor Shah Rukh Khan, who is currently promoting his upcoming film "Fan", says he is a proud, true and eternal fan of legend Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil