»   »  ஒவ்வொரு படத்திலும் கஜோலை மிஸ் செய்கிறேன்... ஷாருக் கான்

ஒவ்வொரு படத்திலும் கஜோலை மிஸ் செய்கிறேன்... ஷாருக் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கஜோலை மிஸ் பண்ணுவதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் ஜோடி என்று அழைக்கப்படும் ஷாருக்கான், கஜோல் ஜோடி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து கலக்க உள்ளனர்.

பாஸீகர், குச் குச் ஹோத்தா ஹை, தில் வாலே துல்கனியா லே ஜாயங்கே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஷாருக்கானும், கஜோலும் ஜோடியாக நடித்துள்ளனர்.

மை நேம் இஸ் கான்

மை நேம் இஸ் கான்

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மை நேம் இஸ் கான்' படத்திற்கு பிறகு இந்த ஜோடியை ஒன்றிணைத்து படம் பண்ண பல டைரக்டர்கள் முயன்றும் முடியாமல் போனது. தற்போது, அந்த ஜோடியை இணைக்கும் முயற்சியில் டைரக்டர் ரோகித் ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார்.

தில்வாலே

தில்வாலே

ஆமாம், ஷாருக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ரோகித் ஷெட்டி இப்போது மீண்டும் ஷாருக்கானை வைத்து தில்வாலே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மீண்டும் கஜோலுடன்

மீண்டும் கஜோலுடன்

இதில், கஜோல் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

20வது ஆண்டு விழா

20வது ஆண்டு விழா

இந்நிலையில், தில் வாலே துல்கனியா லே ஜாயங்கே படத்தின் 20 வது ஆண்டு விழா தில்வாலே பட செட்டில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய ஷாருக்கான், இந்தப்படம் எனக்கும் கஜோலுக்கும் எதிர்பாராதவிதமாக அமைந்தது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கஜோலை மிஸ் பண்ணுகிறேன்.

எனக்காக டைம் ஒதுக்கிய கஜோல்

எனக்காக டைம் ஒதுக்கிய கஜோல்

தற்போது இந்தப் படத்தில் நடிக்க கஜோல் 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியு்ள்ளார். இதற்காக அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு நேரம் ஒதுக்கியுள்ளார் என பெருமைபட தெரிவித்தார் ஷாருக்கான்.

டிசம்பர் 18ம் தேதி

டிசம்பர் 18ம் தேதி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கஜோலும், ஷாருக்கும் ஜோடி சேர்ந்திருக்கும் தில்வாலே திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
I miss Kajol in every film. With this film she gave us 150 days. She had to be away from her children and I know it is a huge sacrifice for a parent.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil