»   »  பெண்களின் கஷ்டம் பெண்ணாக நடிக்கும் போது புரிந்தது... ரெமோ சிவகார்த்திக்கேயன்

பெண்களின் கஷ்டம் பெண்ணாக நடிக்கும் போது புரிந்தது... ரெமோ சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் பெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். இப்போது அவர்களின் கஷ்டமும் புரிகிறது. உடலில் வேக்ஸிங் என உண்மையில் பெண்களின் கஷ்டத்தை நான் பெண்ணாக நடிக்கும் போதுதான் உணர்ந்தேன் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருப்பவர்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெமோ. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் ஆகியவற்றை இயக்குநர் ஷங்கர் வியாழக்கிழமையன்று வெளியிட்டார். மேலும், 24 ஏ.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதால் ஏ.வி.எம்.சரவணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

ரெமே படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திக்கேயன். நர்ஸ் வேடத்திலும் நடிக்கிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திக்கேயன் பெண்ணாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் சிரமத்தையும் தெரிவித்தார்.

8 முறை கதை கேட்டேன்

8 முறை கதை கேட்டேன்

இந்த கதையை 10 மாதங்களில் சுமார் 8 முறை கேட்டிருக்கிறேன். நீங்க மட்டும் தான் இக்கதையை பண்ண முடியும் என்று இயக்குநர் கூறும் போது பில்டப் கொடுக்கிறார்கள் நம்ம உஷாரா இருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். "சரி.. ட்ரை பண்ணலாம்" என்று சொன்னேன்.

பொறுமை அவசியம்

பொறுமை அவசியம்

இக்கதைக்கு எருமையை விட பொறுமை அவசியமாக தேவைப்பட்டது. ஏனென்றால் மேக்கப் போடும் போது எல்லாம் தலையில் 50 ஹேர்பின்கள் இருக்கும். 10 மாதம் எனக்காக காத்திருந்த இயக்குநருக்கு என்னுடைய 1 வருடத்தை ஒதுக்கி கொடுத்தேன்.

மிகப்பெரிய விழா

மிகப்பெரிய விழா

இப்படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர் என்று நிறையப் பேர் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை நான் இப்படி ஒரு படம் தயாரித்திருந்தால் இவ்வளவு பெரிய விழா எல்லாம் எடுத்திருக்க மாட்டேன். ரேடியோவில் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு சென்றிருப்பேன். இவ்வளவு பெரிய மெனக்கிடலுக்கு காரணம் எல்லாமே ராஜா அண்ணன் தான்.

நாயகன் அந்தஸ்து

நாயகன் அந்தஸ்து

நானே தயாரிக்கலாம் என்று யோசித்தேன். காமெடியனாக அனைத்து நாயகர்களுடன் நடித்தால் போது என்று நினைத்தவனுக்கு நாயகன் என்ற பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு மேல் ஒரு பெரிய அங்கீகாரத்தால் எனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ஷங்கர் சாரின் ரெமோ

ஷங்கர் சாரின் ரெமோ

இப்படத்துக்கு முதலில் உள்ளே வந்தவர் பி.சி.ஸ்ரீராம் சார். அவர் நான் வளரும் கலைஞர் என்று சொன்னாலும், நாங்கள் அவரை ஒளிப்பதிவின் பிதாமகராகத் தான் பார்க்கிறோம். அவர் உள்ளே வந்தவுடன் சின்ன ரொமோவாக இருந்த படம் ஷங்கர் சார் ரொமோவாக மாறியிருக்கிறது.

என்னைப் பார்த்து எனக்கே காதல் வந்தது

என்னைப் பார்த்து எனக்கே காதல் வந்தது

என்னுடைய பெண் வேடத்துக்கு பி.சி.ஸ்ரீராம் சார் ஸ்பெஷலாக லைட்டிங் எல்லாம் பண்ணியிருந்தார். நானே ஒருமுறை ஸ்கிரீனில் பார்க்கும் போது காதல் வந்துவிட்டது. "சே.. நாம தான் அது" என்று அடித்துக் கொண்டேன்.

ஸ்பெஷல் மேக் அப்

ஸ்பெஷல் மேக் அப்

நான் பெண் வேஷம் போட முடியுமா என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 8 மேக்கப் டெஸ்ட்டுக்குப் பிறகு நிக்கி, ரேச்சல், அனு மேடம் இவர்கள் மூவரும் போட்ட மேக்கப் சரியாக இருந்தது. என்னுடைய மேக்கப் பிடித்திருந்தது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் 3 பேரும் தான்.

பெண் வேடம் கஷ்டம்

பெண் வேடம் கஷ்டம்

பெண் வேடத்துக்கு 3 முறை த்ரெட்டிங், வேக்சிங் உள்ளிட்ட நிறைய பண்ணினேன். அதெல்லாம் எப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு வலித்தது. 42 நாட்கள் பெண்ணாக நடித்து முடித்தவுடன் அந்த வேடத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. 20 நாள் ப்ரேக் எடுத்து வீட்டில் சும்மா உட்கார்ந்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தேன்.

நான் நடிகனாகிவிட்டேனா?

நான் நடிகனாகிவிட்டேனா?

நான் அதிகமாக கோபப்பட மாட்டேன், எரிச்சலடைய மாட்டேன். ஆனால் இப்படப்பிடிப்பில் எனக்கு அதெல்லாம் வந்துவிட்டது. அதெல்லாம் தாண்டி ரொம்ப சந்தோஷமாக பணியாற்றினேன். நான் ஒரு நடிகராக ஆகவிட்டேனா என்றெல்லாம் தெரியாது. நடிகராக ஆவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன்.

அனிருத்துக்கு நன்றி

அனிருத்துக்கு நன்றி

இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. '3' படத்தின் போது எப்படி இருந்தாரோ, அப்படியே இன்னும் இருக்கிறார். எங்களுடைய நட்பு என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. நான் எப்போது கேட்டாலும், கதையே கேட்காமல் ஒப்புக் கொள்வார். அந்த நம்பிக்கையில் தான் அவரிடம் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

பி.சி.ஸ்ரீராம் சார், இயக்குநர் என எல்லாருமே கீர்த்தி சுரேஷ் நாயகி என்று சொல்லும் போது வேண்டாம் என்று சொன்ன முதல் ஆள் நான் தான். 2 படங்கள் தொடர்ச்சியாக பண்ணினால் கிசுகிசு வந்துவிடும் என நினைத்தேன். இப்படத்தின் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது என்றார்

மனைவிக்கு நன்றி

என் படத்தைப் பார்க்க வரும் மக்கள், தட்டிக் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் தரும் நம்பிக்கையில் தான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருப்பவர்கள் தான் ஆதரவாக இருக்க வேண்டும். இந்த மேடையில் நான் என் மனைவி ஆர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சிவகார்த்திக்கேயன் கூறினார்.

English summary
Remo is an upcoming Tamil romantic comedy film. The film stars Sivakarthikeyan and Keerthy Suresh in the leading roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil