»   »  முதலமைச்சரை நான் அவமதித்தேனா - விஷால் விளக்கம்

முதலமைச்சரை நான் அவமதித்தேனா - விஷால் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுவதால் தேர்தல் தற்போது வெளிப்படையான போராகவே மாறியிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் முதலமைச்சர் ஜெயலலிதாதாவை பற்றி விரும்பத்தகாத வகையில் கருத்து சொன்னதாக திரையுலகில் ஒரு வதந்தி வேகமாக பரவியது.

I Respect our Honourable Chief Minister - Says Vishal

தேர்தல் நேரத்தில் நடிகர் விஷால் இவ்வாறு கருத்து சொன்னதை திரையுலகினர் பலரும் ரசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் நடிகர் விஷால் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் "நான் நமது முதல்வர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்.

முதல்வர் அவர்கள் நடிக, நடிகையருக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார். நான் அவரைப் பற்றி தவறாக எதுவும் கூறவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று நீண்டதொரு விளக்கத்தை விஷால் அளித்திருக்கிறார்.

English summary
Rumours were rife that Vishal had passed made some insulting comment about J Jayalalithaa. Now Vishal took to Twitter and wrote "I respect our honorable chief minister &I stand to correct. Hav neva told or conveyed anything about not respecting our cm s words.Not rite".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil