»   »  நான் புகைப்பிடிக்கத் துவங்கியதற்கு காரணம் ஒரேயொரு நபர்: கமல் ஹாஸன்

நான் புகைப்பிடிக்கத் துவங்கியதற்கு காரணம் ஒரேயொரு நபர்: கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஒரேயொருவரால் தான் புகைப்பிடிக்க ஆரம்பித்தேன். நமக்கு எல்லாம் புகைப்பிடிக்கும் ஆசையை ஏற்படுத்தியவர் மிஸ்டர் சிவாஜி கணேசன் என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே மாநாட்டில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தனது திரையுலக பயணம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலிவுட் பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் கமல் கூறுகையில்,

சிவாஜி

சிவாஜி

நான் ஒரேயொருவரால் தான் புகைப்பிடிக்க ஆரம்பித்தேன். நமக்கு எல்லாம் புகைப்பிடிக்கும் ஆசையை ஏற்படுத்தியவர் மிஸ்டர் சிவாஜி கணேசன். அவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலை பார்த்தாலே அழகாக இருக்கும். நாமும் புகைப்பிடிக்க வேண்டும் போல் இருக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் என் நண்பர்கள் சிலர் புற்றுநோயால் இறந்துள்ளனர். கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் நான் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பேன்.

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

திலீப் குமார், சார்லி சாப்ளின் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஆவர். திலீப் சாபை சந்தித்து பேசிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் மண்டியிட்டு அவரது கையை முத்தமிட்டேன். இளம் தலைமுறைக்கு திலீப் சாப் பற்றி தெரியவில்லை.

மும்பை

மும்பை

இந்தி சினிமாவில் நான் இருந்த நேரம் நானே என் துணிகளை துவைத்து வேலைகள் செய்திருக்கிறேன். நிழல் உலகத்திற்கும் பாலிவுட்டுக்கும் நிறைய தொடர்பு. அங்கிருந்தால் ஒன்று அதை எதிர்க்க வேண்டும் இல்லை மிரட்டலுக்கு பணிய வேண்டும். அதனால் மும்பையில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன்.

English summary
Actor Kamal Haasan said that he started smoking because of only one man and he is none other than Sivaji Ganesan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil