»   »  'தல'யுடன் 'டிஷ்யூம் டிஷ்யூம்'.. இது ஆதியின் 'ஸ்மால்' ஆசை!

'தல'யுடன் 'டிஷ்யூம் டிஷ்யூம்'.. இது ஆதியின் 'ஸ்மால்' ஆசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல அஜீத்துடன் சண்டை போட வேண்டும் என்று வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவரான ஆதி தெரிவித்திருக்கிறார்.

மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆதி. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஈரம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனால் அடுத்தடுத்து வெளியான அரவாண்,யாமிருக்க பயமே போன்ற படங்கள் ஆதிக்கு வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் உரையாடிய ஆதி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

I Want to Work with Ajith says Aadhi

அதில் ஜெய பிரசன்னா என்ற ரசிகர் ரஜினி, கமல் தவிர்த்து யாருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஆதி 'தல' என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க, சந்தோஷ் என்ற ரசிகர் "அழகான பொண்ணுக்கு பாய்பிரெண்ட் இல்லாதது தல படத்திற்கு ஓபனிங் இல்லாத மாதிரி" என்று ஆதி பட வசனத்தைக் கூறி அந்த இடத்தை கலகலப்பாக்கியிருக்கிறார்.

ஆதியின் இந்த பதில் தற்போது தல ரசிகர்களின் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

English summary
Actor Aadhi says in Recent Chat Session "I Want to work with Thala Ajith".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil